அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பள்ளிமுனை கடலில் காணாமல் போன மீனவர்கள் இருவர் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு(படம்)

மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் இருந்து நேற்று முந்தினம் (13) சனிக்கிழமை காலை கடற்தொழிலுக்குச் சென் மீனவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலிக் போது காணாமல் போனதாக கூறப்படும் இரு மீனவர்களும் நேற்று   சனிக்கிழமை மாலை கடற்படையினரினால் கைது செய்யப்பட்டு முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போனதாக கூறப்படும் பேதுரூ இரஞ்சன்(வயது-25) மற்றும் ஏ.யூட்சன் டெரன்சியன்(வயது-26) ஆகிய இரு மீனவர்களுமே கடலில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் படகு ஒன்றில் நேற்று   சனிக்கிழமை காலை பள்ளிமுனை கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

இதன் போது   குறித்த மீனவர்கள் 4 பேரூம் இரணை தீவு பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
இருவர் படகில் இருந்தும்,இருவர் கடலில் சுழி ஓடியும் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

இதன்  போது காலை 9 மணியளவில் படகு ஒன்றில் வந்த குழுவினர் குறித்த மீனவர்களின் படகிற்கு அருகில் தமது படகினை நிறுத்தியுள்ளனர்.

இதன் போது சுமார் 6 பேர் சிவில் உடையில் முகத்தை மறைத்தவாறும் ஒருவர் கடற்படையினரின் சீருடையுடனும் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கடற்படையினரின் சீருடையுடன் காணப்பட்ட நபர் குறித்த மீனவர்களின் படகிற்குள் சென்று கதைத்துக் கொண்டிருந்த போது குறித்த மீனவர்களின் படகிற்குள் காணப்பட்ட கத்தியை எடுத்து படகில் இருந்து மீன் பிடித்துக்கொண்டிருந்த ஏசுதாசன் அந்தோனி (வயது-38) மற்றும் ஜேசு ரஞ்சித்(வயது-37) ஆகிய இரு மீனவர்களையும் கண்மூடித்தனமாக வெட்டியுள்ளனர்.
குறித்த மீனவர்கள் இருவரும் கடற்படையினரிடம் இருந்து தப்பி படகின் மூலம் கரை சேர்ந்த நிலையில் குறித்த இரு மீனவர்களும் கடற்கரையில் காணப்பட்ட சக மீனவர்களின் உதவியுடன் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதன் போது கடும் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான குறித்த இரு மீனவர்களுக்கும் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் ஜேசு ரஞ்சித்(வயது-37) எனும் மீனவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஏசுதாசன் அந்தோனி (வயது-38) என்ற மீனவர் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடலில் சுழி ஓடிய மீன் பிடியில் ஈடுபட்ட பேதுரூ இரஞ்சன்(வயது-25) மற்றும் ஏ.யூட்சன் டெரன்சியன்(வயது-26) ஆகிய இரு மீனவர்களும் நீண்ட நேரமாக காணமல் போயிருந்த நிலையில் குறித்த இருவரையும் கடலில் வைத்து கைது செய்துள்ள கடற்படையினர் நேற்று  சனிக்கிழமை மாலை முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக முழங்காவில் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் விசாரனைகளின் பின் நாளை திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த இரு மீனவர்கள் மீதும் ஏன் கடற்படையினர் கத்தியால் வெட்டி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகவில்லை.இதனால் அப்பகுதி மீனவர்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


மன்னார் நிருபர்
(13-2-2016)

மன்னார் பள்ளிமுனை கடலில் காணாமல் போன மீனவர்கள் இருவர் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு(படம்) Reviewed by NEWMANNAR on February 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.