அண்மைய செய்திகள்

recent
-

முழங்காவில் பிரதேசத்தில் இருக்கின்ற சுபன் பண்ணை விடுவிப்பு

முழங்காவில் பிரதேசத்தில் இருக்கின்ற சுபன்  பண்ணை கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளால் விவசாயப்பண்ணையாக நடாத்திவரப்பட்டது.
2009 ஆண்டு யுத்தம் நிறைவடைந்தபின்னர் அங்கு சென்ற இராணுவத்தினர் பண்ணையை கைப்பற்றி நேற்றைய தினம் வரை தமது கட்டுப்பாட்டில் வைத்து தங்களது விவசாய நடவடிக்கைகளை நடாத்திவந்திருக்கின்றனர்.

இன்றைய தினம் மேற்படி பண்ணையானது அங்கு இருந்த இராணுவ உயரதிகாரியினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் நேரடி விஜயத்தை மேற்கொண்டு அங்கு சென்ற போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரன் அவர்கள் அங்கு ஆரம்பத்தில் இருந்து தற்போதுவரை நடைபெற்ற பல்வேறு விடயங்களை அப் பகுதி பிரதேசவாசிகளிடம் கேட்டறிந்தது மட்டுமல்லாது குறித்த பண்ணையினையும் நேரடியாக சென்று பார்வையிட்டிரூக்கின்றார்.

குறிப்பாக மேற்படி பண்ணையானது கடந்த காலத்தில் பிரதேச செயலாளரினால் நடுத்தர வகுப்பினருக்கு ஏறத்தாள 10 நபர்களுக்கு தலா 2 ஏக்கர் வீதம் வழங்கப்பட்டிருந்தது. பின்னரான காலப்பகுதியில் குறித்த நபர்கள் வெளிநாடுகளுக்கு சென்றமையினாலும், அந்தக் காணிகளை பராமரிக்காமல் விட்டமையினாலும் விடுதலைப்புலிகள் தம்வசம் எடுத்து விடுதலைப்புலிகளின் இறந்த லெப்டினன் கேணல் சுபன்  பெயரில் ஒரு விவசாயப்பண்ணையினை நடாத்திவந்திருக்கின்றார்கள். அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தபின்னர் இராணுவத்தினர் அந்தப் பண்ணையினை கையகப்படுத்தி விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்திருந்தமை தெரியவருகின்றது. அண்மையில் அப்பகுதியில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் அங்கிருக்கின்ற பொறுப்புவாய்ந்த இராணுவ அதிகாரிக்குத் தெரியப்படுத்தியதன் அடிப்படையில் இராணுவ அதிகாரி உடனடியாக செயற்பட்டு அங்கிருந்த இராணுவத்தினரை பிரதான முகாமிற்கு உள்வாங்கியிருக்கின்றார்.

ஆகவே மேற்படிபொறுப்புடன் செயல்பட்ட இராணுவ அதிகாரிக்கு அமைச்சர் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்திருக்கின்றார்.

மேலும் அக்குறிப்பிட்ட காணியினை அருகில் இருக்கின்ற கிளி/முழங்காவில் ஆரம்ப பாடசாலைக்கும், மத்திய மகா வித்தியாலயத்துக்கும் பொதுத் தேவையின் அடிப்படையில்,தேவை இருப்பதனையும் உணர்ந்து சம்மந்தப்பட்ட காணியினை குறித்த பிரதேச செயலாளர் ஊடாக உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு அமைவாகவும், பாடசாலைக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய நடவடிக்கையினை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்போவதாகவும் அங்கிருக்கின்ற மக்களுக்கு தெரிவித்தார். 

அதுமட்டுமல்லாது அந்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரையிலும் அங்கிருக்கின்ற விவசாய அமைப்பை அந்த பண்ணையில் தற்போது காணப்படுகின்ற பல பயிர் வகைகளை பராமரித்து அதில் பெறக்கூடிய நன்மையினை குறித்த விவசாய அமைப்பு பெறுமாறும் குறித்த நடவடிக்கையினை அப் பிரதேச செயலாளரின் அனுமதியுடன் மேற்கொள்ளுமாறும் அங்கிருக்கின்ற அமைப்புக்களுக்கு இன்றைய தினம் அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றார். ஆகவே இதுபோன்ற பல்வேறு பண்ணைகளும், பொதுமக்களின் காணிகளும் இன்னும் இராணுவத்தின் வசம் இருக்கின்றது உண்மையில் மேற்படி உயர் இராணுவ அதிகாரி செயற்பட்டது போன்று ஏனைய பிரதேசங்களில் இருக்கின்ற உயர் அதிகாரிகள் மக்களின் தேவை அறிந்து, பொது முக்கியத்துவம் அறிந்து தேவையற்ற இடங்களில் இருக்கின்ற இராணுவத்தினரை தமது பிரதான முகாம்களுக்கு எடுப்பார்கள் என்று சொன்னால் பொதுமக்களுக்கும், இந்த நல்லாட்சிக்கும் இடையில் ஓர் புரிந்துணர்வு முன்னோக்கி நகர்த்தப்படும் என்றும், பொறுப்புடனும், கடமையுணர்வுடனும் செயற்படுகின்ற அதிகாரிகளை நாம் பாராட்டுவது எமது கடமை என்பதனையும் தெரிவித்துநிற்கின்றார்




முழங்காவில் பிரதேசத்தில் இருக்கின்ற சுபன் பண்ணை விடுவிப்பு Reviewed by NEWMANNAR on February 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.