முருங்கன் பேரூந்து நிலையத்தை திறந்து வைத்தார் அப்போஸ்தலிக்க பரிபாலகர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை.
மன்னார் நானாட்டான் பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட முருங்கன் பேரூந்து நிலைய திறப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை இடம் பெற்றது.
வடமாகாண போக்கு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குறித்த பேரூந்து நிலைய திறப்பு விழா வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.
-இதன் போது பிரதம விருந்தினராக மன்னார் மாவாட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மற்றும் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான்,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இதன் போது நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.பரமதாசன் உற்பட திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
(மன்னார் நிருபர்)
(18-2-2016)
வடமாகாண போக்கு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குறித்த பேரூந்து நிலைய திறப்பு விழா வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.
-இதன் போது பிரதம விருந்தினராக மன்னார் மாவாட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மற்றும் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான்,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இதன் போது நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.பரமதாசன் உற்பட திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
(மன்னார் நிருபர்)
(18-2-2016)
முருங்கன் பேரூந்து நிலையத்தை திறந்து வைத்தார் அப்போஸ்தலிக்க பரிபாலகர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை.
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
February 18, 2016
 
        Rating: 
      
No comments:
Post a Comment