அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னாரில் ” சமாதனத்தின் அரசி ” புதிய ஆலயம் திறப்பு விழா… 01-03-2016 முழுமையான படங்களுடன்


தலைமன்னார் ஊர்மனையில் புதிதாக   கட்டப்பட்ட ” சமாதனத்தின் அரசி ‘ புதிய ஆலயத்தை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி. விக்டர் சோசை அடிகளாரினால்  (01/03/2016) மாலை புதிய ஆலயத்தை ஆசீர் வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

பின்பு புதிய ஆலயத்தி குரு முதல்வரின் தலைமையில்  எமது பங்கின் மைந்தன் அருட்பணி. லக்ஸ்டன் டி சில்வா அடிகளார் மற்றும்  எமது பங்கு தந்தை அருட்பணி.நவரெட்னம் அடிகளார்  இணைந்து  சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.    

இவ்  புதிய  ஆலயம் கட்டுவதற்க்கு  சகல விதமான பணத்தையும் அன்பளிப்பு செய்த தலைமன்னாரை சேர்ந்த விமலதாஸ் இசபெல்லா குடும்பத்தினருக்கும், இவ் ஆலயத்தை கட்டுவதற்க்கு உதவிய அனைவருக்கும் நன்றி சொல்லும் நிகழ்வும் இடம்பெற்றது.


  ‘சமாதனத்தின் அரசி”   மாதாவின் வரலாற்று குறிப்புகள்….


பிரான்சில் வயல் மாதா அல்லது காட்டு மாதா என அழைக்கப்படும் சமாதானத்தின் இராக்கிணி அன்னை 1938ம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் பல்வேறு புதுமைகள் , அற்புதங்கள் புரிந்து பிரபலயம் அடைந்த மாதாவாகும்.                                                                                                                                   அக் காலத்தில் கர்தினாலாக இருந்தவரும் அவருடன் உடனிருந்த  7 ஆயர்களும் அன்னையின் இரக்கம், ஆசிர்  உலகமெங்கும் பரந்து செல்ல வேண்டும் என்று எண்ணி இவ் அன்னையை பல நாடுகளுக்கு குறிப்பாக லத்தீன், அமெரிக்கா, ஆர்ஜென்ரினா, இந்தியா போன்ற நாடுகளுக்கு அன்னையின் திருச் சுருபத்தை கொண்டு சென்றனர்.

                இவ்வாறு பிரான்சிலும் இவ் ஆலயம் கட்டப்பட வேண்ட்டுமென்று இவர்கள் விருப்பம் கொண்டனர்.     அதன் காரணமாக 1981 ம் ஆண்டு பாப்ரசர் 2 ம் ஜோன் போல்  பிரன்சின் புஏம் எனும் கிராமத்துக்கு சென்று அவ் இடத்தை பார்வையிட்டு  அவ்விடம் அன்னையின் ஆலயம் அமைப்பதற்க்கு பொருத்தமான இடம் என்பதை  உணர்ந்து அன்னையின் ஆலயம் அமைகப்பதற்கான வேலைகளை ஆரம்பித்தார்.

இவரின் விடா முயற்சியால் 1988ம் ஆண்டு ஆலய வேலைகள் முற்று முழுதாக நிறைவு செய்யப்பட்டு 52.000 சாட்சிகளோடு  ஆசிர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

                        பின்னர் அந்தோணி நேத்தி, கூறே  ஆகிய இருவரினால் கண்காணிக்கப் பட்டு பராமரிக்கப் பட்டது. பின்னர்  2000ம் ஆண்டு  புனித ஜோண் போல் திருத்தந்தையால் யுபிலி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.  அதன் பிற்பாடு 2003ம் ஆண்டு ஜப்பசி மாதம் 02 ம் திகதி  15 வது  வருட நிறைவை முன்னிட்டு  அன்னையை நினைவு கூர்ந்து பெரிய டோம்  (கோபுரம்) கட்டப்பட்டது.

                             இவ்  அன்னையின் ஆலயமானது பிரான்ஸ் நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதியில் வயல்கள் சூழப்பட்ட பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ் ஆலயத்துக்கு பிரான்ஸ் நாட்டு மக்கள் மட்டுமல்லாது ஏனைய அயல் நாடுகளான சுவிஸ்,ஜேர்மன்,கனடா,லன்டன் போண்ற நாடுகலிருந்தும் மக்கள் வருகை தந்து அன்னையின் ஆசிரை பெற்று செல்கின்றார்கள்.

                                          இவ் அன்னையானது இன , மத , பேதமின்றி  அனைத்து மக்களுக்கும் தனது பரிந்துயால் ஏராளமான உதவிகளை  புரிந்துவருகின்றார்.

1, குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதோருக்கு , குழந்தை  பாக்கியம் பெற்றுக்கொடுத்தல்.

2, நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு சுகம் கொடுத்தல்

3, குடிபோதையில் பாதிக்கப்பட்டோருக்கு அதிலிருந்து விடுதலை கொடுத்தல்.

போண்ற உதவிகளை புரிந்து மக்கள் வாழ்வை வளமாக்கின்றார்.    ஒரு நாளில் ஆகக் குறைந்த 500 யாத்திரிகள் செல்வது வழ்க்கமாகவுள்ளது .

மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில்  பிரான்சில் வாழும் இலங்கை தமிழ் உறவுகளுக்கு தமிழ்மொழியில் இந்திய நாட்டு குரு அருட்தந்தை பிறிற்றோ அடிகளாரால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகின்றது.

 ஆவணி மாதம் 15 ம் திகதி இவ் அன்னையின் திருவிழாவை பிரான்ஸ் நாட்டு மக்கள் சீரும், சிறப்பும் கொண்டபடி அன்னையின் அருளாசி பெற்று வருகின்றனர்.





























தலைமன்னாரில் ” சமாதனத்தின் அரசி ” புதிய ஆலயம் திறப்பு விழா… 01-03-2016 முழுமையான படங்களுடன் Reviewed by Author on March 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.