அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருப்பதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது-அமைச்சர் சுவாமிநாதனிடம் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.கோரிக்கை.(படம்)


அரசியல்  கைதிகள் குறித்து சட்டமா அதிபரின் அறிக்கையினை தாம் எதிர் பார்த்துக் கொண்டிருப்பதாகவும்,குறித்த அறிக்கையின் பிரகாரமே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என மீள் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் வி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான  செல்வம் அடைக்கலநாதன் நேற்று   புதன் கிழமை மாலை மீள் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் வி.எம்.சுவாமிநாதனுடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொண்டார்.


இச்சந்திப்பின் போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,,,,

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களின் நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்று   புதன் கிழமை மாலை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் வி.எம்.சுவாமிநாதன் அவர்களை அவருடைய அமைச்சில் வைத்து சந்தித்தேன்.

இதன் போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் குறித்து பல்வேறு விடையங்களை அமைச்சரிடம் தெழிவு படுத்தினேன்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபட அனுமதிக்க முடியாது எனவும்,உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன்.

இதன் போது சட்டமா அதிபரின் அறிக்கையை தாம் எதிர் பார்த்துக்கொண்டிருப்பதாகவும்,குறித்த அரசியல் கைதிகள் அனைவருக்கும் புனர்வாழ்வு அழிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் தாம் மேற்கொள்ளுவதாகவும்,ஆனால் அரசியல் கைதிகள் அனைவரும் புனர்வாழ்வு பெற்றுக்கொள்ள சம்மதிப்பார்களா? என தெரியாது.

புனர்வாழ்வு பெற்றுக்கொள்ள சிலர் சம்மதிக்கின்றனர் சிலர்   மறுப்புத்தெரிவிக்கின்றார்கள் எனவும், அவ்விடையம் தமக்கு பிரச்சினையாக இருக்கின்றது என  அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் சகல அரசியல் கைதிகளுக்கும் புனர்வாழ்வு வழங்கப்படும் என ஒருமித்த முடிவை எடுத்து அதனை அரசியல் கைதிகளிடம் தெரிவிக்கின்ற போது அதற்கு அவர்கள் சம்மதிக்க முடியும்.என அமைச்சரிடம் தெரிவித்தேன்.

அதனை விடுத்து அவர்களுக்கு உரிய பதில் எதனையும் கூறாது விட்டால் அவர்கள் இப்படிப்பட்ட முடிவுகளையே எடுக்க வேண்டியுள்ளது எனவும்,தமிழ் அரசியல் கைதிகள் இன்றுடன் 9 ஆவது நாளாக தமது உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே அவர்களின் விடுதலை குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என மீள் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் வி.எம்.சுவாமிநாதனிடம் அவசர வேண்டுகோளை விடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.




-மன்னார் நிருபர்-

(3-3-2016)
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருப்பதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது-அமைச்சர் சுவாமிநாதனிடம் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.கோரிக்கை.(படம்) Reviewed by NEWMANNAR on March 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.