அண்மைய செய்திகள்

recent
-

100 குழந்தைகள் பெறும் முற்சியில் வைத்தியர்....


பாகிஸ்தானில் 35 குழந்தைகளுக்கு தந்தையான மருத்துவர் ஒருவர் 100 குழந்தைகள் பெறுவதே தனது இலட்சியம் என தெரிவித்து அதற்கான முற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பாகிஸ்தானில் பாகிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவை சேர்ந்தவர் ஜான் முகமது என்ற இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இவர்கள் மூலம் மொத்தம் 35 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 21 மகள்கள் 14 மகன்கள் உள்ளனர்.

இவருக்கு கடந்த வாரம் தான் 2–ஆவது மற்றும் 3–ஆவது மனைவிகள் மூலம் 2 பெண் குழந்தைகள் பிறந்தன.

இவ்வளவு பெரிய குடும்பத்தை சிரமமின்றி நிர்வகிப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ‘சமீபத்தில் எனது மனைவிகள் மூலம் 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதனால் தற்போது எனது குழந்தைகள் எண்ணிக்கை 35 ஆகிவிட்டன.

இதனால் மிகவும் பெருமையாக உள்ளது. எனக்கு 4ஆவது திருமணம் நடந்தால் 100 குழந்தைகளை பெற வேண்டும். அதுவே எனது ஆசையும் இலட்சியமும் ஆகும்.

எனது 3 மனைவிகள் மற்றும் குழந்தைகளை பராமரிக்க மாதம் 1 இலட்சம் ரூபா வரை செலவாகிறது. நான் தரமான வைத்தியராக இருக்கிறேன். சிறிய அளவில் வியாபாரமும் செய்கிறேன். அதன் மூலம் குடும்பத்தை சிறப்பாக நிர்வகிக்க முடியகிறது’ என்றார்.




100 குழந்தைகள் பெறும் முற்சியில் வைத்தியர்.... Reviewed by Author on March 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.