உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஏப்ரலில் உருவாக்கம்!
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அடுத்த மாதம் நிறுவப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உண்மையைக் கண்டறிதல் மற்றும் மனித உரிமை மீறல் குறித்த பொறிமுறைமை அடுத்த மாதத்தில் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வன்னிப் போர் தொடர்பிலான காரணிகளின் அடிப்படையில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படவுள்ளது.
இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு தென் ஆபிரிக்காவின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக உயர்மட்ட அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவிற்கு பிழைகளுக்காக மன்னிப:பு வழங்கும் அதிகாரங்களும் வழங்கப்படவுள்ளது.
மூவர் அடங்கிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
இதேவேளை, இந்த ஆணைக்குழுவினை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஏப்ரலில் உருவாக்கம்!
Reviewed by Author
on
March 26, 2016
Rating:
No comments:
Post a Comment