மன்னாரில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தற்கொலை அங்கியே சாவகச்சேரியில் மீட்பு - 2வது மனைவியே தகவல் அளித்தாராம்-ஆங்கில நாளிதழ்
சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்பு! கைதானவரின் இரண்டாவது மனைவியே தகவல் அளித்தாராம்!
சாவகச்சேரி, மறவன்புலவில் மீட்கப்பட்ட தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும் வெடிபொருள்கள் குறித்த தகவலை கைதானவரின் இரண்டாவது மனைவியே வழங்கினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று மேற்படி விடயத்தை செய்தியாக வெளியிட்டுள்ளது. மறவன்புலவில் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட தேடுதலில் வெடிபொருள்கள் சிக்கின. சந்தேகநபரை வன்னேரிக்குளத்தில் வைத்து பொலிஸார் கைது செய்தனர். கைதான ரமேஸ் எனப்படும் எட்வேர்ட் ஜூலியன் (வயது 32) என்றும்,13 வயதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ரமேசின் இரண்டாவது மனைவியே, வெடிபொருட்கள் பற்றிய தகவலை பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். போர் முடிவுக்கு வந்த பின்னர் ரமேஸ் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெடிபொருட்களை சில நாட்களுக்கு முன்னரே, மன்னாரில் இருந்து ரமேஸ் அந்த வீட்டுக்குக் கொண்டு வந்துள்ளார். அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்தே, அவரது இரண்டாவது மனைவி இது பற்றிய தகவலை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். ரமேஸ் முன்னர், மன்னாரில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தவர் என்றும் கூறப்படுகிறது என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர் கூறும் காரணம் இதுதான்!
சாவகச்சேரி பகுதியில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் தொடர்பிலான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்கவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த வெடிபொருட்கள் நேற்று அதிகாலை கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சி - அக்கராயன்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் பயங்கரவாத புலானய்வுப் பிரிவினரால் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணையில் சில விடயங்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, குறிப்பிட்ட அனைத்து வெடிபொருட்களும் மீன் கொண்டு செல்லும் லொறி ஒன்றிலேயே அந்த வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கைதான நபர் வீட்டின் உரிமையாளரும், லாரியின் சாரதியுமாவார். குறிப்பிட்ட தற்கொலை அங்கி, மற்றும் வெடிபொருட்கள் முல்லைத்தீவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அவற்றை பயன்படுத்த முடியும் என்பதால் தான் அவற்றை கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எட்வட் எனப்படும் குறிப்பிட்ட நபர் புனருத்தாரணம் வழங்கப்படாத முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் என தெரிவிக்கப்டுள்ளது.
சாவகச்சேரி, மறவன்புலவில் மீட்கப்பட்ட தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும் வெடிபொருள்கள் குறித்த தகவலை கைதானவரின் இரண்டாவது மனைவியே வழங்கினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று மேற்படி விடயத்தை செய்தியாக வெளியிட்டுள்ளது. மறவன்புலவில் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட தேடுதலில் வெடிபொருள்கள் சிக்கின. சந்தேகநபரை வன்னேரிக்குளத்தில் வைத்து பொலிஸார் கைது செய்தனர். கைதான ரமேஸ் எனப்படும் எட்வேர்ட் ஜூலியன் (வயது 32) என்றும்,13 வயதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ரமேசின் இரண்டாவது மனைவியே, வெடிபொருட்கள் பற்றிய தகவலை பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். போர் முடிவுக்கு வந்த பின்னர் ரமேஸ் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைதானவர் கூறும் காரணம் இதுதான்!
சாவகச்சேரி பகுதியில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் தொடர்பிலான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்கவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த வெடிபொருட்கள் நேற்று அதிகாலை கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சி - அக்கராயன்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் பயங்கரவாத புலானய்வுப் பிரிவினரால் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணையில் சில விடயங்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, குறிப்பிட்ட அனைத்து வெடிபொருட்களும் மீன் கொண்டு செல்லும் லொறி ஒன்றிலேயே அந்த வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கைதான நபர் வீட்டின் உரிமையாளரும், லாரியின் சாரதியுமாவார். குறிப்பிட்ட தற்கொலை அங்கி, மற்றும் வெடிபொருட்கள் முல்லைத்தீவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அவற்றை பயன்படுத்த முடியும் என்பதால் தான் அவற்றை கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எட்வட் எனப்படும் குறிப்பிட்ட நபர் புனருத்தாரணம் வழங்கப்படாத முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் என தெரிவிக்கப்டுள்ளது.
மன்னாரில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தற்கொலை அங்கியே சாவகச்சேரியில் மீட்பு - 2வது மனைவியே தகவல் அளித்தாராம்-ஆங்கில நாளிதழ்
Reviewed by NEWMANNAR
on
March 31, 2016
Rating:

No comments:
Post a Comment