அண்மைய செய்திகள்

recent
-

கனடா வரலாற்றில் முதல் நிகழ்வு: 64 மில்லியன் டொலர் ஜாக்பாட் வென்ற பெண்....


கனடா வரலாற்றில் முதன் முதலாக லாட்டரி பரிசு கூப்பன் மூலம் பெண் ஒருவர் 64 மில்லியன் டொலர் பரிசை தட்டிச்சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Mississauga நகரில் Zhe Wang என்ற பெண்மணி வசித்து வருகிறார்.

இந்த மாகாணத்தில் கடந்த அக்டோபர் 17ம் திகதி Lotto 649 என்ற லாட்டரி பரிசு கூப்பன் பரபரப்பாக விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த லாட்டரி கூப்பனை இவர் வசிக்கும் நகரத்தில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்தில் வாங்கியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக இவர் வாங்கிய லாட்டரி கூப்பனுக்கு 94 மில்லியன் டொலர் ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளதாக Lotto 649 நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுமட்டுமில்லாமல், கனடா வரலாற்றில் முதன் முதலாக இவ்வளவு பெரிய தொகையை பரிசாக பெற்றுள்ளதும் இந்த பெண்மணி தான் என நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 13ம் திகதியில் 63.4 மில்லியன் டொலர் ஜாக்பாட் பரிசு விழுந்தது தான் இதுவரை பெரிய தொகையாக இருந்து வந்துள்ளது.

ஒரே லாட்டரியில் கிடைத்துள்ள இப்பெரிய தொகையை பிரித்தானிய கொலம்பியாவை சேர்ந்த மூவர் மற்றும் மேற்கு கனடாவை சேர்ந்த ஒருவர் என நால்வர் பகிர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடா வரலாற்றில் முதல் நிகழ்வு: 64 மில்லியன் டொலர் ஜாக்பாட் வென்ற பெண்.... Reviewed by Author on March 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.