அண்மைய செய்திகள்

recent
-

உலகின் மிகப்பெரிய முட்டை: கின்னஸ் சாதனை படைக்குமா?


ஜேர்மனியில் வயதான தம்பதியர் வளர்த்து வந்த கோழி ஒன்று உலகில் மிகப்பெரிய அளவிலான முட்டையை இட்டுள்ளது.
ஜேர்மனியின் Lower Saxony மாநிலத்தை சேர்ந்த வயதான தம்பதிகளான Ingrid மற்றும் Günther Meyne ஆகிய இருவரும் பொழுபோக்கிற்காக கோழிப்பண்ணை வைத்து கோழிகளை வளர்த்து வருகின்றனர்.

இவர்களது பண்ணையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், கோழி ஒன்று 184 கிராம் அளவிலான முட்டையை இட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வாரம் அதனை விட மிகப்பெரிய அளவிலான, 209 கிராம் எடையில் முட்டையை இட்டுள்ளது, பீ.பீ.ஏ. செய்தி நிறுவனம் ஒருவேளை இந்த முட்டையானது உலகின் மிகப்பெரிய முட்டையாக இருக்கும் என செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், Braunschweig நகரில் அமைந்துள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியத்தில் இதனை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்காக, அருக்காட்சியத்தின் விஞ்ஞானி ஆண்ட்ரே கோச் அனுமதி கேட்டுள்ளார்.

பெரிதாக உள்ள முட்டையின் ரகசியம் என்ன? என்பது குறித்து அனைவரும் சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில், இதுகுறித்து Günther Meyne கூறியதாவது, நாங்கள் கோழிகளுக்கு உணவாக தானியங்கள் மற்றும் காய்கறிகளையே கொடுத்தோம் என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த முட்டையின் ஒடு பச்சை நிறத்தில் இருப்பதால், இது Easter Egger இனத்தினை சேர்ந்தது என விஞ்ஞானி கோச் கூறியுள்ளார்.

இருப்பினும், இது உலகின் மிகப்பெரிய முட்டையை என்ற கின்னஸ் சாதனையை சாதிக்க இயலாது, ஏனெனில், 1956 ஆம் ஆண்டு அமெரிக்காவில் 454 கிராம் எடையிலான முட்டை இந்த சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


உலகின் மிகப்பெரிய முட்டை: கின்னஸ் சாதனை படைக்குமா? Reviewed by Author on March 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.