சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு… மன்-புனித-பத்திமா மத்திய மகாவித்தியாலயத்தின்----
மன்னார் மாவட்டத்தின் பேசாலைக்கிராமத்தில் அமைந்திருக்கும் மன்-புனித-பத்திமா மத்திய மகாவித்தியாலயத்தின் பிரதான நுழைவாயிலுக்கு செல்லும் பாதை பிரதான வீதியில் இருந்து சுமார் 50 மீட்டருக்கும் குறைவாகவே உள்ளது.
இப்பாதையானது குண்டும் குழியுமாக பெரும் பள்ளமாகவே தோற்றமளிக்கின்றது காரணம் அருகில் புகையிரத பாதையும் உள்ளது இதுவும்.பாதுகாப்பற்ற கடவை முறையில்தான் உள்ளது பாடசாலைக்கு வருகின்ற மாணவமாணவிகள் ஆசிரியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகுகின்றார்கள்.
பிரதான வீதியில் இருந்து இறங்கும் போது பள்ளத்தில் இறங்குவதாகவே எண்ணம் எழுகின்றது.
தற்பேதைய சூழ்நிலையில் பரவாயில்லை இன்னும் சில மாதங்களில் மழை பெய்ய ஆரம்பித்தால் வெள்ளம் தேங்கி விடும் அத்தோடு சேறும் சகதியுமாகத்தான் இருக்கும் எனவே பாடசாலை மாணவமாணவிகளின் கல்விச்செயற்பாட்டினை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மிகவிரைவாக எமக்கு இப்பாதையை செப்பணிட்டு தருமாறு பாடசாலை சமூகம் மாணவமாணவிகள் ஆசிரியர்கள் அதிபர் பெற்றோர்கள் அனைவரும் கேட்டுக்கொள்கிறோம்.
விரைவான சேவை….எம் மன்னாருக்கு தேவை…….
சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு… மன்-புனித-பத்திமா மத்திய மகாவித்தியாலயத்தின்----
Reviewed by Author
on
March 31, 2016
Rating:

No comments:
Post a Comment