அண்மைய செய்திகள்

recent
-

மறையாத மாணிக்கம் கலாநிதி மனோகரக்குருக்களின் 4ஆண்டு நிறைவு தினமும் பரிசளிப்பு விழாவும்....முழுமையான படங்கள் இணைப்பு


சிவபூமியாம் மன்னார மாவட்டத்தின்  ஆனமீகப்பணியும் சமூகப்பணியும் தொண்டாற்றி மறைந்தும் மறையாத மாணிக்கம் கலாநிதி மனோகரக்குருக்களின் 4ஆண்டு நிறைவு தினமும் பரிசளிப்பு விழாவும் இன்று சனிக்கிழமை 12-03-20016 காலை 09-30 மன்.சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் மாதாந்த இலக்கிய இதழான நந்தி இதழ் சிறப்பு மலராக வெளியிட்டு கௌரவித்துள்ளது….


தலைமை-பிரம்மஸ்ரீ.மனோ.ஐங்கரசர்மா தலைவர்-கலாநிதி மனோகரக்குருக்கள் நற்பணி மன்றம்-மன்னார் மாவட்டம்.

பிரதம விருந்தினர்களாக-----
வைத்திய கலாநிதி.மு.கதிர்காமநாதன் தலைவர்-இந்து ஆலயங்களின் ஒன்றியம்.மன்னார்
திரு.செ.சி.இராமகிருஸ்னன் தலைவர்-இந்து மஹா சபை-மன்னார்
சிறப்பு விருந்தினர்களாக-----
திரு.எஸ்.சண்முகலிங்கம் முகாமையாளர்-ஆங்கிலவளநிலையம்-மன்னார்
திரு.த.தனேஸ்வரன் அதிபர் மன்.சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி தே.பா
திருமதி.பு.மணிசேகரன்-மாவட்ட கலாசார உத்தியோகத்தர்-மன்னார்

கௌரவ விருந்தினர்கள்…..
திருமதி.உஷா ஸ்ரீஸ்கந்தராசா (இயக்குனர்-ஸ்ரீசாஹித்தியா நாட்டியப்பள்ளி)
திருமதி.க.கயல்விழி (இயக்குனர்-கவின் கலாலயா நாட்டியப்பள்ளி)
திருமதி.கௌரி றோகன்ராஐ; ஆசிரியர்-மன்.பற்றிமா மகா வித்தியாலயம்
திருமதி.க.துளசிகுமாரி மனிதவள அபிவிருத்தி அலுவலர்
திரு.இராஐஸ்ரீறிதரன் கணக்காய்வு அபிவிருத்தி உத்தியோகத்தர்

நிகழ்வுகளாக-----
விருந்தினர் வரவேற்பு
இடபக்கொடியேற்றம் -திரு.சி.கிருபானந்தன்
மங்கல விளக்கேற்றல்
இறைவணக்கம்-மு.ஹரிணி-ஞானவைரவர் அறநெறிப்பாடசாலை மன்னார்
வரவேற்புரை-மஹாஸ்ரீ தர்மகுமார குருக்கள்-செயலாளர் கலாநிதி மனோகரக்குருக்கள் நற்பணிமன்றம்
வரவேற்பு நடனம்-சித்திவிநாயகர் அறநெறிப்பாடசாலை
ஆசியுரை-சிவஸ்ரீ தி.கருணாநந்தக்குருக்கள் தலைவர் இந்துக்குருமார் பேரவை
திருக்குறள் பேச்சு-கெ.திலக்சா-ஞானவைரவர் அறநெறிப்பாடசாலை
நினைவுப்பேருரை-சித்த வைத்திய நிபுணர் எஸ்.லோகநாதன்
நடனம்-புஸ்பாஞ்சலி ஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலை கீரி
வினாடிவினாப்போட்டியும் விருந்தினர்கள் உரையும் இடம்பெற்ற….

விஷேட சிறப்பு நிகழ்வாக கலாநிதி மனோகரக்குருக்கள் நினைவு விருதினை  பிரம்மஸ்ரீ ப.சிவானந்த சர்மா (கோப்பாய் சிவம்) அவர்களுக்கு பொன்னாடையுடன் மலர்மாலை அணிவித்து விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தனதுரையில் தான் பல விருதுகள் பெற்றிருந்தாலும் சமீபத்தில் அரசாங்கத்தினரால் வழங்கிய கௌரவ விருதான கலாபூஷணம் விருது பெறும் போது இருந்த சந்தோஷத்தினைவிட மன்னார் மாவட்டத்திற்கு என்னை அழைத்து தனக்கு வழங்கிய மனோகரக்குருக்கள் நினைவு விருதும் சிவாகம விசாரதர் என்னும் கௌரவப்பட்டத்தினையும் பெறும் போது எற்பட்ட மகிழ்ச்சி அளப்பரியது, எத்தனை விருது பெறுகிறோம் என்பது முக்கியமல்ல எங்கு பெறுகிறோம் யாரிடம் பெற்றுக்கொள்கிறோம் என்பதுதான் பெருமையும் சிறப்பும் உரியது அந்த வகையில் இந்த நாள் என் வாழ்நாளில் இனிமையான நாளாகும் அத்தோடு இங்குள்ள மாணவச்செல்வங்கள் சைவசமயத்திலும் தமிழிலும் பரதத்திலும்  ஆர்வமுள்ளவர்களாய் உள்ளார்கள்.

பொதுவாக இந்துக்குருமார்கள் பற்றாக்குறைப்பிரச்சினையை மிகவிரைவில் தீர்க்க வேண்டிய கடப்பாடு ஒவ்வெரருவருக்கும் உண்டு அதை நிவர்த்தி செய்ய முனையவேண்டும்.

மஹாசிவராத்திரி தினத்தினை முன்னிட்டும் மனோகரக்குருக்கள் 4ம் ஆண்டு நினைவுதினத்தினையும் முன்னிட்டு நடாத்தப்பட்ட திருக்குறள் போட்டி பண்ணிசை ஓதும் போட்டி-வினாடி வினாப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு  பதக்கம் சான்றிதழ பரிசுப்பொருட்கள் வழங்கிக்கௌரவிக்கப்பட்டனர்.
நன்னியுரையினை சிவஸ்ரீ வீ.விஜயபாபு குருக்கள் வழங்கினார் விழா இனிதே நிறைவுற்றது.
























































































மறையாத மாணிக்கம் கலாநிதி மனோகரக்குருக்களின் 4ஆண்டு நிறைவு தினமும் பரிசளிப்பு விழாவும்....முழுமையான படங்கள் இணைப்பு Reviewed by Author on March 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.