வவுனியா மாவட்டத்தில் படைமுகாம் அமைப்புகளுக்கு வடமாகாணசபையில் கடும் கண்டனம்...
வவுனியா மாவட்டத்தில் படையினருக்கான குடியிருப்பு அமைத்தல் மற்றும் வடமாகாணத்தில் குடி பரம்பலை மாற்றியமைக்கும் குடியேற்றங்கள், படைமுகாம் அமைப்புக்களுக்கு வடமாகாணசபையில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் 48ஆம் அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, வவுனியா மாவட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி படையினருக்கான குடியிருப்பு ஒன்றை திறந்து வைக்கவுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன் சபையில் குறிப்பிட்டதுடன், மாகாணசபையில் இதற்கான கடுமையான கண்டனம் தெரிவிக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன், இது தொடர்பில் சபையில் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திடம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள்.
இதன்போது, எதிர்க்கட்சிகள் இந்த விடயத்தில் தாம் முழுமையான உடன்பாட்டை தெரிவிப்பதாக கூறியதுடன், குறித்த விடயத்தை சபையில் கொண்டுவந்த முறை பிழையானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த எதிர்ப்பின் போது ஆளும்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். தொடர்ந்தும் சபையில் குறித்த விடயம் தொடர்பான விவாதம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், குறித்த விடயத்தை முதலமைச்சர் ஊடாக ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Reviewed by Author
on
March 24, 2016
Rating:

No comments:
Post a Comment