மன்னார் சிலாபத்துறை கல்லாறு கடற்கரை பகுதியில் 51 கிலோ கேரளா கஞ்சா மீட்பு.(Photos)
மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை கல்லாறு கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 51 இலட்சம் ரூபாய் பெறுமதியான 51 கிலோ 500 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சாப்பொதிகளை நேற்று வியாழக்கிழமை மாலை மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மன்னார் பொலிஸ் நிலையத்தின் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.டபில்யு.ஹெரத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று வியாழக்கிழமை மாலை முசலி பகுதிக்கு விரைந்து சென்ற நிலையில், சிலாபத்துறை கடற்படையுடன் இணைந்து சிலாபத்துறை கல்லாறு பகுதிக்கு சென்ற போது போதைப்பொருள் கடத்தல் காரர்கள் 14 பொதிகளில் அடைக்கப்பட்ட கேரளா கஞ்சாப்பொதிகளை கல்லாறு கடற்கரை பகுதியில் தூக்கி எறிந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளனர்.
-இதன் போது சுமார் 14 பொதிகளில் அடைக்கப்பட்ட கேரளா கஞ்சாப்பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
-மீட்கப்பட்ட கஞ்சாப்பொதிகள் சுமார் 51 கிலோ 500 கிராம் எடை கொண்டது எனவும், சுமார் 52 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதி வாய்ந்தது என மன்னார் பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
தற்போது குறித்த கஞ்சாப் பொதிகள் மன்னார் சிரேஸ்ட பொலிஸ் காரியாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
எனினும் சந்தேக நபர்கள் எவறும் கைது செய்யப்படவில்லை எனவும்,குறித்த கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.டபில்யு.ஹெரத் மேலும் தெரிவித்தார்.
மன்னார் நிருபர்
25-03-2016
மன்னார் சிலாபத்துறை கல்லாறு கடற்கரை பகுதியில் 51 கிலோ கேரளா கஞ்சா மீட்பு.(Photos)
Reviewed by NEWMANNAR
on
March 25, 2016
Rating:
No comments:
Post a Comment