முல்லைத்தீவு மீனவர்களுக்கு படகுகளையும் உபகரணங்களையும் வழங்குகிறது இந்தியா....
முல்லைத்தீவு மீனவர்களுக்கு 150 படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் வழங்கும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திடவுள்ளன.
இந்த உடன்படிக்கை நாளை மீன்பிடித்துறை அமைச்சில் கைச்சாத்திடப்படவுள்ளது.
இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் வை. கே சிங்ஹா, மற்றும் இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் டபில்யூ எம் எம் ஆர் அதிகாரி ஆகியோர் கைச்சாத்திடவுள்ளனர்.
இந்திய மீனவர்களின் அத்துமீறலால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.
எனவே இந்திய அரசாங்கம் அவர்களுக்கு நட்டஈட்டை வழங்கவேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இந்தநிலையிலேயே இந்திய அரசாங்கத்தின் உதவி முல்லைத்தீவு மீனவர்களுக்கு கிடைக்கவுள்ளது.
முல்லைத்தீவு மீனவர்களுக்கு படகுகளையும் உபகரணங்களையும் வழங்குகிறது இந்தியா....
Reviewed by Author
on
March 31, 2016
Rating:

No comments:
Post a Comment