யாழ். கட்டளைத் தளபதி....எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ள தயார்!
வட பகுதியில் எவ்வாறான அவசர நிலையையும் சமாளிக்கும் வகையில் இராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாக, யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ். சாவகச்சேரி பகுதியிலிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்நிலையில், முழுமையான விசாரணைகளின் பின்னரே, கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் நோக்கங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், இராணுவத்தினர் மூலோபாய ரீதியாக தயார் நிலையில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். கட்டளைத் தளபதி....எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ள தயார்!
Reviewed by Author
on
March 31, 2016
Rating:

No comments:
Post a Comment