நீங்கள் சதம் அடிக்க வேண்டு, இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற அமிதாப்பின் கோரிகைக்கு கெய்லின் அட்டகாச பதில்
வியாழன் அன்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டி மும்பையில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி மும்பையில் முகாமிட்டுள்ளது. டி20 பாஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் கெய்லை தனது வீட்டுக்கு அழைத்து இரவு விருந்து அளித்தார் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன்.
அமிதாப் வீட்டிற்கு சென்றது குறித்து கெய்ல் தனது இன்ஸ்டகிராமில் ”வீட்டிற்கு அழைத்ததற்கும், உபசரிப்புக்கும் நன்றி. பாஸ்(அமிதாப் பச்சன்) அரையிறுதி போட்டியில் நான் சதம் அடிக்க வேண்டும் என்றும், அதேசமயம் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். ஆனால் என்னுடைய சதத்தை விட இந்தியாவிற்கு எதிராக வெற்றி பெருவதையே நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் "கெய்ல் என்னுடைய ரசிகர் என்று எனக்கு தெரியாது" என்று கூறியுள்ளார்.
நீங்கள் சதம் அடிக்க வேண்டு, இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற அமிதாப்பின் கோரிகைக்கு கெய்லின் அட்டகாச பதில்
Reviewed by Author
on
March 29, 2016
Rating:

No comments:
Post a Comment