அண்மைய செய்திகள்

recent
-

டி20 பெண்கள் உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை அணி


உலகக் கோப்பை டி20 பெண்களுக்கான போட்டியில் நேற்று தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதின. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கேப்டன் ஜெயங்கானி 52 ரன்கள் எடுத்து அசத்தினார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் காப் மற்றும் லூஸ் இரு வீராங்கனைகளும் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க வீராங்கனைகளான நியேகெர்க் 24 ரன்களும், செட்டி 26 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த இலங்கை அணி வீராங்கனை ஜெயங்கானி ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

இதனிடையே, ஆண்கள் பிரிவில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் இலங்கை அணி தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

டி20 பெண்கள் உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை அணி Reviewed by Author on March 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.