க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்! பரீட்சைகள் திணைக்களம் தகவல்
கடந்த வருடம் நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதம் வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.என்.ஜே. புஸ்பகுமார மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் நாடளாவிய ரீதியில் நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் தனிப்பட்ட பரீட்சாத்திகள், பாடசாலை பரீட்சார்த்திகள் உள்ளடங்களாக மொத்தமாக 6 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
மேலும் கடந்த வருடம் நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர பரீட்சைகளிலும் பார்க்க அதிகமான பரீட்சார்த்திகள் தோற்றிய ஒரு பரீட்சையாகவும் இது அமைந்தது.
அத்துடன் குறித்த பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் அனைத்தும் இந்த மாதம் 5ம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் ஏனைய வருடங்களைப் போலவே இந்த வருடமும் இம் மாத இறுதியில் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பரீட்சைகள் திணைக்களம் முன்னெடுத்து வருவதாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்! பரீட்சைகள் திணைக்களம் தகவல்
Reviewed by Author
on
March 03, 2016
Rating:
Reviewed by Author
on
March 03, 2016
Rating:


No comments:
Post a Comment