மடு கல்வி வலயத்தில் ஆரம்ப கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவச பயிற்சிப்புத்தகங்கள் வழங்கி வைத்த வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்.-Photos
மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பெரிய பண்டிவிருச்சான் தமிழ் கலவன் ஆரம்ப பாடசாலையில் ஆரம்ப கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் நேற்று (13) இலவசமாக ஒரு தொகுதி பயிற்சி புத்தகங்களை வழங்கி வைத்தார்.
குறித்த பாடசாலையைச் சேர்ந்த 12 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் ஆரம்ப கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஒரு தொகுதி பயிற்சிப்புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதே வேளை குறித்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர் ஒருவரும் நியமிக்கப்பட்டு விசேட கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதே வேளை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு கிராமத்தில் வாசிப்பு கண் குறைபாடுகள் காணப்பட்டவர்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் இலவச மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்தார்.
குறித்த கிராமத்தைச் சேர்ந்த 150 பேர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஏற்ற வகையில் இலவசமாக வாசிப்பு மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மடு கல்வி வலயத்தில் ஆரம்ப கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவச பயிற்சிப்புத்தகங்கள் வழங்கி வைத்த வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 14, 2016
Rating:

No comments:
Post a Comment