அண்மைய செய்திகள்

recent
-

"பாறை" மீது கொண்ட தீராக்காதல்: திருமணம் செய்து காதல் வசனம் பேசும் பெண் கலைஞர்....


பிரித்தானியாவை சேர்ந்த பெண் கலைஞர் ஒருவர் பாறையை(Rock) திருமணம் செய்ததன் மூலம் இந்த உலகை திரும்பி பார்க்கவைத்துள்ளார்.
பிரித்தானியவின் மிகப்பிரபல கலைஞரான Tracey Emin - க்கு, பாறையின் மீது காதல் ஏற்பட்டுள்ளது, இதனால் பாறையை திருமணம் செய்துகொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல், அந்த தகவலை உலகுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

ஹாங்ஹாங்கில் நடைபெற்ற கண்காட்சியில் வைத்து பண்டையகால பாறையை பார்த்த இவருக்கு அதன் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது, இதனால் தனிமையில் வாழ்வை கழிக்க விரும்பாத இவர் பாறையை திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் இப்போது தனியாக வாழவில்லை, பாறையை திருமணம் செய்துகொண்டு அதனுடன் தான் இருக்கிறேன்.

நாம் திருமணம் செய்துகொண்ட பாறை மிகவும் அழகாக இருக்கும், மேலும் என்ன நடந்தாலும் பாறை ஒரு இடத்தை விட்டு நகராமல் அந்த இடத்திலேயே இருப்பதால், அந்த பாறை எனக்காக காத்திருக்கும்.

உதாரணத்திற்கு, சுனாமி ஏற்பட்ட போது, பல்வேறு பொருட்கள் இடம்விட்டு இடம் மாறின நகர்ந்து போயின, ஆனால் பாறைகள் மட்டும் அப்படியே இருந்தன.

எனவே பாறைகள் மிகவும் நல்லவை, அதனை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது என்று கூறியுள்ளார்.

பாறையை திருமணம் செய்துகொண்டது முதல், காதல் மற்றும் உணர்வுகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் நான் ஆர்வமாக இருக்கிறேன் எனக்கூறியுள்ளார்.


"பாறை" மீது கொண்ட தீராக்காதல்: திருமணம் செய்து காதல் வசனம் பேசும் பெண் கலைஞர்.... Reviewed by Author on March 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.