சுமார் 110 வருடங்களுக்குப் பின்னர் வடபகுதியின் புகையிரதப்பாதை புனரமைப்பு...
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான புகையிரத பாதையில் மஹவையிலிருந்து தாண்டிக்குளம் வரையான புகையிரதப் பாதை சுமார் 110 வருடங்களுக்குப் பின்னர் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.
இதில் 120 கிலோ மீற்றர் தூரத்திற்கான பகுதியே இவ்வாறு புனரமைக்கப்படவுள்ளதாகவும் இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த புனரமைப்பு வேலைகளுக்காக 25 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் புனரமைப்புப் பணிகளை இந்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 110 வருடங்களுக்குப் பின்னர் வடபகுதியின் புகையிரதப்பாதை புனரமைப்பு...
Reviewed by Author
on
March 26, 2016
Rating:

No comments:
Post a Comment