அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் சமநேரத்தில் முக்கிய மூன்று விடயங்களும்: மக்கள் குழப்பம்....


காணாமற்போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு இன்று இரண்டாவது நாளாக முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தில் சாட்சியங்களைப் பதிவு செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.
அதேவேளை சட்சிங்களுக்கு சமூகமளிக்காமல் கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த இடத்தில் மீள்குடியமர்த்துமாறு கோரி இன்று மூன்றாவது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்கின்றனர்.

இந்நிலையில் புதுக்குடியிருப்பு திம்பிலிப்பகுதியில் புதிய வீடு அமைத்துக்கொடுப்பது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெறுகின்றது.

குறித்த மூன்று முக்கிய விடயங்களில் எதில் கலந்து கொள்வது என்று தாய்மார்கள் சிந்தித்துப்பார்த்து தற்பொழுது காணாமற்போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் மக்ஸ்வெல் பரணகம முன்னிலையில் இருக்கின்றனர்.

எனினும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தாய்மார்கள் காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிபிடத்தக்கது.
முல்லைத்தீவில் சமநேரத்தில் முக்கிய மூன்று விடயங்களும்: மக்கள் குழப்பம்.... Reviewed by Author on March 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.