டோனியின் மிகப்பெரிய சொத்து எது தெரியுமா? சொல்கிறார் சச்சின் டெண்டுல்கர்....
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியை முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி பேசியுள்ளார்.
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் களைகட்ட தொடங்கியுள்ளது.
இதில் சொந்த மண்ணில் களமிறங்கும் டோனி தலைமையிலான இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது
சிறந்த பினிஷரான டோனியும் நல்ல பார்மில் இருப்பது அந்த அணிக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது.
ஆனால் அவுஸ்திரேலிய தொடருக்கு முன்னால் அவர் துடுப்பாட்டத்தில் சற்று தடுமாறி வந்தார். இதனால் பலரும் அவரை விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் டோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவரை பாராட்டியும் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், எந்தவொரு வீரரும் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து பார்மில் இருக்க முடியாது. அவர்கள் ஒன்றும் மிஷின் இல்லை.
டோனியின் துடுப்பாட்ட மட்டையை பந்து சந்திக்கும் போது கேட்கும் சத்தம் வித்தியாசமானது. அது போன்ற சத்தம் திறமையான வீரர்களை தனித்து காட்டும்.
அவர் எளிதாக நெருக்கடியை தாங்கிக் கொள்கிறார். இந்த குணம் தான் டோனியின் மிகப்பெரிய சொத்தாக உள்ளது. கடந்த பல வருடங்களில் அவர் நல்ல அனுபவம் பெற்றுள்ளார்.
பதட்டமான சூழ்நிலையில் கூட அதை வெளிக்காட்டாமல் அவர் செயல்படும் விதம் சிறப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுவதில் அவுஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்க அணிகள் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
டோனியின் மிகப்பெரிய சொத்து எது தெரியுமா? சொல்கிறார் சச்சின் டெண்டுல்கர்....
Reviewed by Author
on
March 14, 2016
Rating:
Reviewed by Author
on
March 14, 2016
Rating:



No comments:
Post a Comment