கேப்பாபுலவு மக்களின் உண்ணாவிரத்தை விரைவாக முடித்துவைப்பேன்: சம்பந்தன்
தம்மை சொந்த இடங்களில் மீள்குடியேற்றக்கோரி உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை விரைவில் முடித்து வைப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த இடத்தில் மீள்குடியமர்த்துமாறு கோரி இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்கின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவரும் த.தே.கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தொலைபேசி வழியாக தொடர்பினை ஏற்படுத்தி மக்களின் நிலமையை அறிந்ததுடன் இது தொடர்பாக நல்லாட்சி அரசிடம் நேரடியாக பேசி முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
எனினும் தமக்கு எழுத்து மூலம் உறுதியான முடிவை வழங்கும் வரை போராட்டம் தொடருமென கேப்பாபுலவு மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நேற்றைய தினம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எடுத்துச்சொல்லவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சம்பந்தன் இது தொடர்பில் மக்களின் நிலமையினை அறிந்து கொண்டுள்ளதுடன் விரைவில் முடிவு அறிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கேப்பாபுலவு மக்களின் உண்ணாவிரத்தை விரைவாக முடித்துவைப்பேன்: சம்பந்தன்
Reviewed by Author
on
March 26, 2016
Rating:

No comments:
Post a Comment