ரோஹித் சர்மாவுக்கு "ஹாட்ரிக்" விருது! தெரிவு செய்த ஜெயவர்த்தனே....
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 3வது முறையாக ’கிரிக்இன்போ’ விருதை பெற்றுள்ளார்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் தரம்சாலாவில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் ரோஹித் சர்மா 66 பந்தில் 106 ஓட்டங்கள் குவித்தார். இந்த சிறந்த இன்னிங்சிற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே பரிந்துரை செய்தார்.
இவருடன் முன்னாள் தலைவர்களான வாலஷ் (மேற்கிந்திய தீவுகள்), ஜான் ரைட் (நியூசிலாந்து) ஆகியோரும் அந்த விருது வழங்கும் தெரிவு குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
மேலும் ஆண்டின் சிறந்த தலைவருக்கான விருது சமீபத்தில் ஓய்வு பெற்ற மெக்குல்லமுக்கும், சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர் விருது ஸ்டூவர்ட் பிராட்டுக்கும், சிறந்த டெஸ்ட் துடுப்பாட்டர் விருது வில்லியம்சனுக்கும் கிடைத்தது.
ஒருநாள் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர் விருது டிவில்லியர்சுக்கும், சிறந்த பந்து வீச்சாளர் விருது சவுத்திக்கும் கிடைத்துள்ளது.
ஆண்டின் சிறந்த புதுமுக வீரர் விருதை வங்கதேசத்தின் இளம் பந்துவீச்சாளர் முஸ்தாபிகுர் ரஹ்மான் பெற்றார்.
ரோஹித் சர்மாவுக்கு "ஹாட்ரிக்" விருது! தெரிவு செய்த ஜெயவர்த்தனே....
Reviewed by Author
on
March 17, 2016
Rating:

No comments:
Post a Comment