அண்மைய செய்திகள்

recent
-

கனரக வாகனத்துடன் மோதியது மோட்டார் சைக்கிள் (ஒருவர் உயிரிழப்பு)

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியதில் மோட் டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை 5.00 மணியளவில் கிளிநொச்சி முருகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இதில் வவுனியா கனகராயன்குளத்தை வசிப்பிடமாகவும் பண்டத்தரிப்பை சொந்த இடமாகவும் கொண்ட எஸ்.கலைச்செல்வன் (வயது-26) என்பரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

 வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கனரக வாகனம் ஒன்று நேற்று மாலை 5மணியளவில் முருகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாக பயணத்தின் போது நிறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளையில் வவுனியா கனகராயன் குளத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் குறித்த நபர் பயணித்த வேளை மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கனரக வாகனம் மீது பின்னால் மோதி யது.

இதில் படுகாயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உடனடியாக அங்கு நின்றவர்களால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்துத் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் மரண விசாரணைகளுக் காக  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  
கனரக வாகனத்துடன் மோதியது மோட்டார் சைக்கிள் (ஒருவர் உயிரிழப்பு) Reviewed by Admin on March 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.