இன்னும் சில தசாப்தங்களுக்குள் நியூயோர்க்கும் இலண்டனும் நீரில் மூழ்கி விடும்!:அதிர்ச்சி தரும் ஆய்வு
பூகோள வெப்ப மயமாவதால் ஒவ்வொரு வருடமும் கடல் நீர் மட்டம் குறிப்பிட்டளவு உயர்ந்து வருவதாகவும் இன்னும் 50 - 150 வருடங்களுக்குள் இதனால் பூமியிலுள்ள சமுத்திரங்கள் பல மீட்டர்கள் உயர்ந்து விடும் எனவும் அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இதற்கு முன் 120 000 வருடங்களுக்கு முன்னர் தான் நமது பூமி இயற்கையாகவே வெப்பம் அடைந்ததாகவும் ஆனால் தற்போது நிலமை இன்னமும் மோசம் எனவும் கூட கணிப்பிடப் பட்டுள்ளது.
தற்போது உள்ளதை விட தொழில்துறை காரணமாக வெப்பநிலை 2 டிகிரி வெப்பநிலை உயர்ந்தால் உலகின் முக்கிய நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் விரைவில் உள்ளது. கடந்த மாதம் இந்த விடயத்துக்கு என்றே பிரத்தியேகமாக மேற்கொள்ளப் பட்ட கல்வி ஒன்றில் பூகோள வெப்பமயமாவதால் 2100 ஆம் ஆண்டளவுக்குள் நியூயோர்க், இலண்டன், ரியோ டே ஜெனீரோ மற்றும் ஷங்காய் ஆகியன வெள்ளம் சூழ்ந்து நீரில் மூழ்கி விடும் என எச்சரிக்கப் பட்டுள்ளது. மேற் குறித்த நகரங்கள் அனைத்துமே கடற்கரையோர நகரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக விஞ்ஞானிகள் கடல் மட்டம் உயர்வது இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு ஆபத்தில்லை என்றே கருதி வந்தனர். ஆனால் தற்போது இன்னும் 50 வருடங்களுக்குள் கடல் மட்டம் பல அடிகளாவது உயரலாம் என்று கணிக்கப் பட்டுள்ளது. இது ஆபத்தான கணிப்பே ஆகும்.
இந்த ஆய்வை நடத்திய பதவி விலகிய நாசாவின் வானிலை விஞ்ஞானியான ஜேம்ஸ் E.ஹான்சென் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 'எமது வருங்கால சந்ததிக்கு உரிய சுற்றுச் சூழலை விட்டுச் செல்ல முடியாத ஆபத்தான சூழலில் நாம் உள்ளோம்.' என்று கூறியுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு -
http://www.dailymail.co.uk/sciencetech/article-3504667/New-York-London-underwater-DECADES-Scientists-say-devastating-climate-change-place-sooner-thought.html
நன்றி:தகவல் Mail Online

Reviewed by NEWMANNAR
on
March 26, 2016
Rating:

No comments:
Post a Comment