அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குஞ்சுக்குளம் தேக்கம் உணவகம் திறந்து வைப்பு.(Photos)

மன்னார் குஞ்சுக்குளம் தேக்கம் பகுதியில் வடமாகாண சபையின் சுற்றுலா அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தேக்கம் உணவகம் இன்று புதன் கிழமை(16) மதியம் வடமாகாண கல்வி அமைச்சர் ரி.குருகுலராஜா அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா அபிவிருத்தி நித ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு கோடி 20 இலட்சம் ரூபாய் நிதியில்  நானாட்டான் பிரதேசச்  சபையினால் குறித்த 'தேக்கம் உணவகம்' அமைக்கப்பட்ட நிலையில் குறித்த உணவகம் இன்று புதன் கிழமை மதியம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம வருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் ரி.குருகுலராஜா, விருந்தினர்களாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன்,சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா உற்பட வடமாகாண சபையின் முக்கிஸ்தர்கள்,மடு பிரதேசச் செயலாளர் எப்.சி.சத்தியசோதி,நானாட்டான் பிரதேச சபை,பிரதேச செயலக பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் தேக்கம் பகுதி ஒரு சுற்றூலத்தளமாக காணப்படுகின்றது. இங்கு தொங்கு பாலம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள் காணப்படுகின்றமையினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தினம் தோறும் தமது பொழுது போக்கிற்காக குடும்பங்களுடன் இப்பகுதிக்கு வருகின்றனர்.

குறித்த சுற்றுலாப்பயணிகளின் நலனை கருத்தில் கொண்டே குறித்த 'தேக்கம் உணவகம்'வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்  அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



மன்னார் நிருபர்

16-03-2016













வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குஞ்சுக்குளம் தேக்கம் உணவகம் திறந்து வைப்பு.(Photos) Reviewed by NEWMANNAR on March 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.