துணுக்காய் கல்வி வலய பணிப்பாளரை இடம்மாற்றுமாறு ஆர்ப்பாட்டம்!
அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு மாவட்டம் – துணுக்காய் கல்வி வலயப் பணிப்பாளரை இடம்மாற்றுமாறு இன்று மதியம் வடமாகாண கல்வி அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.
துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த 62 பாடசாலைகளைச் சேர்ந்த 255 ஆசிரியர்கள் வடமாகாண கல்வியமைச்சை முற்றுகையிட்டு இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்தியுள்ளனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளராக மாலினி வெலிங்ரன் என்பவர் பொறுப்பேற்றபின்னர், அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மற்றும் மோசடி தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றார் எனவும் இது குறித்த விசாரணையை உடனே நடாத்துமாறும் 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைக்கு அறிவித்தபோதும் எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடமும் ஆசிரியர் சங்கம் ஊடாக வடமாகாண சபைக்கு மீண்டும் தெரியப்படுத்தினோம். அதன் பின்னர் கடந்தமாதம் வடமாகாண முதலமைச்சர் இதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தந்த கடிதத்தினையடுத்து ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டிருந்தோம்.
இந்த மாதம் 10ஆம் திகதிவரை காலக்கெடு விதித்திருந்தபோதிலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனையடுத்தே தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரம். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த பணிப்பாளரை உடனே இடம்மாற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் மகஜர் கையளிக்கப்பட்டது.
இதனால்
இன்றையதினம் துணுக்காய் வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நண்பகல் 12.00 மணியுடன் மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Reviewed by NEWMANNAR
on
March 16, 2016
Rating:

No comments:
Post a Comment