அண்மைய செய்திகள்

recent
-

ஊடகவியலாளர் நவரட்ணராஜாவின் மறைவு மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்டி லீக்கிற்கு பாரிய இழப்பு.(படம்)

வலிகாமம் உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவரும்,மூத்த ஊடகவியலாளருமான என்.நவரட்ணராஜா அவர்களின் மறைவு உதைப்பந்தாட்ட துறைக்கு பாரிய இழப்பு என மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் தெரிவித்துள்ளது.

திடீர் சுகயீனம் காரணமாக வலிகாமம் உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவரும்,மூத்த ஊடகவியலாளருமான என் நவரட்ணராஜா (வயது-62) நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை யாழ் வைத்தியசாலையில் உயணிரிழந்தார்.
இந்த நிலையில் இவரது மறைவு குறித்து மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் இறங்கள் செய்தியை விடுத்துள்ளது.

குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,,,

வலிகாமம் உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவரும்,மூத்த ஊடகவியலாளருமான என் நவரட்ண ராஜா உதைப்பந்தாட்ட துறைக்காக பாரிய பங்கை வகித்தவர்.




அனைவருடனும் அன்பாக பழகக்கூடியவர். இளம் வீரர்களை உறுவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டியவர்.தனது மாவட்டம் இன்றி  அனைத்து மாவட்டங்களில் உள்ள உதைப்பந்தாட்ட லீக்குகளுடன் நீண்ட காலமாக தொடர்பை ஏற்படுத்தியவர்.

குறிப்பாக மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்கிற்கு பல்வேறு வகையில் ஊக்கத்தை ஏற்படுத்தியவர்.


ஊடகத்துறையில் இருந்து அன்று முதல் இன்று வரை மக்களுக்காக குரல் கொடுத்தவர்.




மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த வலிகாமம் உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவரும்,மூத்த ஊடகவியலாளருமான என் நவரட்ண ராஜா அவர்களின் பிரிவு ஊடகத்துறைக்கு மட்டுமின்றி உதைப்பந்தாட்ட லீக்கிற்கும் பாரிய இழப்பு.




அன்னாரின் பிரிவால் துயறுற்றுள்ள உற்றார்,உறவினர்,நண்பர்கள்,ஊடகத்துறையினர் மற்றும் உதைப்பந்தாட்ட நண்பர்கள் அனைவருக்கும் மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.


மன்னார் நிருபர்
10-3-2016


ஊடகவியலாளர் நவரட்ணராஜாவின் மறைவு மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்டி லீக்கிற்கு பாரிய இழப்பு.(படம்) Reviewed by Admin on March 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.