வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற அரச பேரூந்தின் சாரதி பயணித்த மாணவிகளை தகாத வார்த்தைகளினால் திட்டியதாக விசனம்
வவுனியாவில் இருந்து மன்னார் நேக்கி பயணித்த இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வவுனியா சாலைக்குச் சொந்தமான பேரூந்தின் சாரதி குறித்த பேரூந்தில் பயணித்த மாணிவிகளுடன் தகாத வார்த்தையினால் பேசியதாகவும், மாணவி ஒருவரை தாக்க முற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தை பேரூந்தில் பயணித்த மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவதானித்ததோடு, சாரதி நடந்து கொண்ட விதம் குறித்து தமது கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
வவுனியா அரச பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து வவுனியா சாலைக்குச் சொந்தமான WP-NB-8874 என்ற அரச பேரூந்து இன்று புதன்கிழமை மதியம் 1.30 மணியளவில் பயணிகளுடன் மன்னார் நோக்கி பயணித்தது.
இதன் போது இடை இடையே பாடசாலை மாணவர்கள் ஏறி இறங்கினர்.
இந்த நிலையில் வவுனியாவில் இருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தொலையில் பாடசாலை மாணவ மாணவிகள் பலர் குறித்த பேரூந்தில் ஏறினர்.
குறித்த மாணவர்கள் பிரயாண அனுமதிச்சீட்டு மற்றும் பணம் கொடுத்து டிக்கட்டினை பெற்று பயணத்தை தொடர்ந்தனர்.
இதன் போது குறித்த பேரூந்தில் ஏறிய மாணவி தான் ஏறிய இடத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் பேரூந்தை நிறுத்தி இறங்கியுள்ளார்.
இதன் போது குறித்த மாணவி தனது பயணத்தை தொடர்வதற்காக நடத்துனரிடம் 8 ரூபாய் செலுத்தி டிக்கட்டினை பெற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த மாணவி சிறிது தூரத்திலேயே இறங்கிய நிலையில் ஆத்திரமடைந்த குறித்த பேரூந்தின் சாரதி பேரூந்தை விட்டு இறங்கி குறித்த மாணவியை தீய வார்த்தைகளினால் பேசி தாக்க முற்பட்ட போது, குறித்த பேரூந்தின் நடத்துனர் உடனடியாக சாரதியை பிடித்து சமாதானப்படுத்தி பேரூந்தில் ஏற்றி மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர்.
இதன் போது குறித்த சாரதி பேரூந்தில் காணப்பட்ட சில மாணவிகளையும் தீய வார்த்தைகளினால் ஏசியதாக பயணித்த பயணிகள் தெரிவித்தனர்.
குறித்த மாணவி தனது பயணத்தை தொடர்ந்த நிலையில் 50 மீற்றர் தூரத்திற்கு நடந்து செல்ல முடியாது பேரூந்தில் ஏறி பயணிக்கவா வேண்டும் என்ற எண்ணத்திலேயே சாரதி நடந்து கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
எனவே குறித்த சாரதி மாணவியுடன் நடந்து கொண்ட விதம் மற்றும் ஏனைய மாணவிகளை தகாத வார்த்தைகளினால் பேசியமையினை குறித்த பேரூந்தில் பயணித்த பயணிகள் கண்டித்துள்ளதோடு,
சாரதியின் நடவடிக்கைகளுக்கு எதிராக வவுனியா சாலை முகாமையாளர் மற்றும் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வடமாகாண முகாமையாளர் ஆகியோர் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என பயணிகளும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Reviewed by Admin
on
March 10, 2016
Rating:

No comments:
Post a Comment