அண்மைய செய்திகள்

recent
-

அரச அதிகாரிகளின் அசமந்த போக்கால் மண் அகழ்வை தடுக்க முடியாதுள்ளது: மக்கள் விசனம்

மன்னார் பட்டித்தோட்டம் கிராமத்தில் பாரிய மண் அகழ்வு இடம் பெற்றுவருவதாக தெரிவிக்கும் குறித்த கிராம மக்கள் அவ் மண் கொள்ளையை உடன் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கடந்த பல வருடங்களாக பல ஏக்கர் காணியில் மண் அகழ்வு நடைபெற்று வருவதாக விசனம் தெரிவிக்கும் அக்கிராம மக்கள் மண் அகழ்வு செய்யபடும் இடம் பாரிய குழிகளாக உருவாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.

பட்டித் தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியிலேயே குறித்த மண் அகழ்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. குறித்த காணியின் உரிமையாளர் வேறு பகுதியில் உள்ள நிலையில் பட்டித் தோட்டத்தை சேர்ந்த இருவரினால் காணியின் உரிமையாளருடன் உடன்படிக்கை அடிப்படையில் மண் வியாபாரத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த காணியில் மண் மேடுகள் காணப்படுவதால் அதனை சமப்படுத்துவதற்காக கோரியதன் அடிப்படையில் மண் அகழ்வு செய்வதற்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் ஒரு நாளைக்கு அகழ்வு செய்யப்படவேண்டிய அளவிற்கு அதிகமாக மண் அகழ்வு செய்யபடுவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

இக்காணியானது வடக்கே மன்னார் ஆயரின் காணியையும் தெற்கே பிரதான வீதியையும் கொண்டுள்ளதால் இக்காணி பெறுமதிமிக்க காணியாக காணப்படுவதுடன், இவ்வாறு தொடர்ந்து மண் அகழ்வு நடைபெற்றால் எதிர்கால சந்ததியினருக்கு வீடுகள் அமைத்தல் உள்ளிட்ட கிராமத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கவலையடைந்துள்ளனர்.

ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் மட்டுமே மண் அகழ்வு செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ள போதிலும் பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் மூன்று டிரக்டர் வண்டியில் இரவு பகலாக மண் அகழ்வு செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அதிகம் மண் அகழ்வு தொடர்ந்து நடைபெறுமாக இருந்தால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு கிராம மக்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவதோடு கிராமம் அழிவடையும் நிலையும் தோன்றி வருவதாக கவலையடைந்துள்ளனர்.

இது தொடர்பாக மன்னார் பிரதேச செயலகம் மற்றும் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்த போதும் குறித்த அதிகாரிகளின் அசமந்தபோக்கால் இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே இது தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நடைபெறும் மண் அகழ்வை தடைசெய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.


அரச அதிகாரிகளின் அசமந்த போக்கால் மண் அகழ்வை தடுக்க முடியாதுள்ளது: மக்கள் விசனம் Reviewed by Admin on March 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.