திமிங்கலம் வாந்தி எடுத்த அதிசய பொருள் 1 கோடிக்கு விற்பனை....
பிரித்தானியாவில் திமிங்கலம் வாந்தி எடுத்த அதிசய பொருள் ஒன்றை அதனை கண்டுபிடித்த தம்பதி 1 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் உள்ள Lancashire என்ற நகரை சேர்ந்த Gary மற்றும் Angela Williams என்ற தம்பதியினரை அடிக்கடி கடற்கரையில் மட்டுமே பார்க்க முடியும் இவர்களின் ஒரே குறி…..திமிங்கலங்கள் வாந்தி எடுத்த பிறகு கடற்கரையில் ஒதுங்கும் அந்த அதிசய பொருளை கண்டுபிடிப்பது தான்.
நடுக்கடலில் உள்ள திமிங்கலங்கள் அரிதான மீன்களை சாப்பிட்ட பிறகு சில மீன்கள் சரியாக செமிக்காமல் திமிங்கலத்தின் குடல் பகுதிலேயே தங்கி விடும்.
ஒரு பெரிய பந்து போல் உருவாகும் இந்த எச்சத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு திமிங்கலம் வாந்தியாக வெளியே தள்ளும்.
மெழுகு பந்துப் போல் இருக்கும் இதுபோன்ற ஒரு பொருளை தான் இந்த பிரித்தானிய தம்பதி Middleton Sands கடற்கரை பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பொருளை விஞ்ஞானிகள் Ambergris என அழைக்கின்றனர். வாசனை திரவியங்கள் தயாரிக்க இந்த பொருள் மிகவும் முக்கியமானதாக தேவைப்படுவதால், இதன் விலையும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்து இருக்கும்.
இதே தம்பதி 3 வருடங்களுக்கு முன்னர் இந்த அதிசய பொருளை கண்டுபிடித்து 1,20,000 பவுண்ட்டுக்கு (2,46,60,169 இலங்கை ரூபாய்) விற்பனை செய்து கோடீஸ்வரராக உயர்ந்துள்ளனர்.
தற்போதும் இதே வகையை சேர்ந்த பொருளை தான் இந்த தம்பதி கண்டுபிடித்துள்ளனர். ஆனால், முன்னர் கண்டுபிடித்ததை விட இதன் எடை 1.57 எடை மட்டுமே உள்ளதால் இது 50,000 பவுண்டுக்கு (1 கோடி இலங்கை ரூபாய்) மட்டுமே விலை போகும் எனக் கூறியுள்ளனர்.
தற்போது நியூசிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வியாபாரிகளிடம் விற்பனை தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தம்பதியினர் உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.
திமிங்கலம் வாந்தி எடுத்த அதிசய பொருள் 1 கோடிக்கு விற்பனை....
Reviewed by Author
on
April 17, 2016
Rating:
Reviewed by Author
on
April 17, 2016
Rating:


No comments:
Post a Comment