அண்மைய செய்திகள்

recent
-

பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து கழற்றிவிடப்பட்ட மரியா ஷரபோவா....


ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவின் பெயர் இந்த ஆண்டுக்கான பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை.

பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் மே 16 முதல் யூன் 5ம் திகதி வரை பிரான்சில் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் பட்டியலில், ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் நம்பர் 1 வீராங்கனை மரியா ஷரபோவா பெயரும் இடம்பெறும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களின் இறுதிப் பட்டியலில் மரியா ஷரபோவா பெயர் இடம்பெறவில்லை.

இதற்கிடையில் பிரபல சுவிஸ் வாட்ச் நிறுவனம் உலக போதைப் பொருள் தடுப்பு அமைப்பு அவருக்கு மன்னிப்பு வழங்கினாலும் கூட அவருடன் வர்த்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.

இந்த நிறுவனத்திற்கும் மரியா ஷரபோவாவுக்கும் இருந்த வர்த்தக ரீதியான ஒப்பந்தம் கடந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் முடிவு வந்தது குறிப்பிடத்தக்கது.

பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து கழற்றிவிடப்பட்ட மரியா ஷரபோவா.... Reviewed by Author on April 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.