அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் எட்டு கலாமன்றங்களுக்கு காத்தவராஜன் சிந்துநடைக் கூத்து போட்டி....


முல்லத்தீவில் கலைஞர்களுக்கான மாபெரும் காத்தவராஜன் சிந்துநடைக் கூத்து போட்டி முல்லை. வித்தியானந்தா கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

வன்னிக்குறோஸ் கலாச்சாரப் பேரவையின் தலைவர் திரு.சி.நாகேந்திரராசா தலைமையில் இடம்பெறும் இந்த போட்டி இரவு 10 மணிவரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் முள்ளியவளை இளந்தளிர் கலாமன்றம், பொன்னகர் முள்ளியவளை பாரதி கலாமன்றம், துணுக்காய் மல்லாவி தமிழ்த்தாய் கலாமன்றம், கூழாமுறிப்பு அண்ணா கலாமன்றம், பெரிய புளியங்குளம் சுந்தராலய கலாமன்றம், புதுக்குடியிருப்பு ஸ்ரீ முத்துமாரி கலாமன்றம், புதுக்குடியிருப்பு இயலிசை நாடக மன்றம் மற்றும் புதுக்குடியிருப்பு வேணாவில் கலைமகள் கலாமன்றம் உள்ளிட்ட எட்டு கலாமன்றங்கள் இந்த போட்டியில் பங்குபற்றுகின்றன.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன், முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி முனீஸ்வரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.





முல்லைத்தீவில் எட்டு கலாமன்றங்களுக்கு காத்தவராஜன் சிந்துநடைக் கூத்து போட்டி.... Reviewed by Author on April 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.