யாழில் 16 இளைஞர்கள் கைது....
யாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய 16 இளைஞர்களை யாழ்ப்பாணப் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞர்கள் யாழ். பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில்நடமாடியதுடன், மது போதையில் தகராற்றிலும் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றச் செயல்களை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழுவினரே இந்த இளைஞர்களை கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்டவர்கள் 18 வயதிற்குமேற்பட்டவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்.இவர்களை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
யாழில் 16 இளைஞர்கள் கைது....
Reviewed by Author
on
April 25, 2016
Rating:

No comments:
Post a Comment