அகதிகள் முகாமில் பாலியல் தாக்குதலை தடுக்க நடவடிக்கை: 200 மில்லியன் யூரோ ஒதுக்கீடு
ஜேர்மனி நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் நிகழும் பாலியல் தாக்குதலை தடுக்க அந்நாட்டு அரசு 200 மில்லியன் யூரோ நிதியை ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புத்தாண்டு தொடங்கியது முதல் ஜேர்மனியில் பாலியல் தாக்குதல் விவகாரம் ஒரு முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
குடிமக்கள் மீது அகதிகள் பாலியல் தாக்குதலை நடத்துவது, அகதிகள் முகாம்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் அரசுக்கு கவலையை ஏற்படுத்தி வந்துள்ளன.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த 200 மில்லியன் யூரோ ஒதுக்கியுள்ளதாக அந்நாட்டு குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இத்துறையின் அமைச்சரான Ralf Kleindiek என்பவர் பேசுகையில், ‘முகாம்களில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பெண்கள் ஆண்களுக்கு என பாதுகாப்பான இடவசதிகளையும் ஏற்படுத்து உள்ளது.
இதன் முதற்கட்டமாக 200 மில்லியன் யூரோ நிதியை நகராட்சி அதிகாரிகள் KfW என்ற வங்கி மூலமாக வட்டி இல்லாமல் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாவும் அவர் அந்த செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல், போர்ச்சூழல்களில் இருந்து மீண்டு வந்த அகதிகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் சுமார் 4 மில்லியன் யூரோ செலவில் ஆலோசனைகள் வழங்கப்படும் என Ralf Kleindiek தெரிவித்துள்ளார்.
அகதிகள் முகாமில் பாலியல் தாக்குதலை தடுக்க நடவடிக்கை: 200 மில்லியன் யூரோ ஒதுக்கீடு
Reviewed by Author
on
April 02, 2016
Rating:
Reviewed by Author
on
April 02, 2016
Rating:


No comments:
Post a Comment