அண்மைய செய்திகள்

recent
-

ஐ.நா.சபையில் பாபா சாகேப் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்....



இந்திய அரசியலைப்பு சட்டம் என்னும் மகத்தான சாசனத்தை வடிவமைத்த மாபெரும் சிற்பியும், சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க பாடுபட்ட சமத்துவ நாயகருமான சட்டமேதை 'பாரதரத்னா’ பாபா சாகேப் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஐ.நா.சபை தீர்மானித்துள்ளது.

ஐ.நா.சபையில் பாபா சாகேப் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
வாஷிங்டன்:

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் விழா வரும் 14-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இதுதொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கான நிரந்தரப் பிரதிநிதியான சையத் அக்பருதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகமெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் தேசிய அடையாளமாகவும், சமதர்மம் மற்றும் சமூகநீதியை விரும்பும் மக்களின் நாயகராகவும் விளங்கும் டாக்டர்  அம்பேத்கரின் பிறந்தநாளை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய அமைப்பு, கல்பனா சரோஜ் அமைப்பு மற்றும் மனிதவள அமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து ஐ.நா.சபையில் வெகு சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் முதல்முறையாக பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்தநாள் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் வரும் 13-ம் தேதி கொண்டாடப்படும். அன்றைய தினம் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி நிரந்தரமான முன்னேற்ற இலக்கை நோக்கி செல்வது தொடர்பான அவரது தொலைநோக்கு பார்வை தொடர்பான கருத்தரங்கமும் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஐ.நா.சபையில் பாபா சாகேப் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.... Reviewed by Author on April 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.