அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் உள்ள பசு மாடுகள் இறைச்சிக்காக விற்பனை- உண்மைகள் அம்பலம்....படங்கள் இணைப்பு

மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குச் சொந்தமான பசு மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டடுள்ள உண்மைகள் அம்பலமாகியுள்ளது.

குறித்த ஆலயத்திற்கு சொந்தமான சிசுக்களுடன் கூடிய பசுக்கள்,மற்றும் ஏனைய எருதுகளும் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினால் விற்கப்பட்டு வதை செய்யப்படுவதை கண்டித்தும்,இறைச்சிக்காக வதை செய்யப்பட்ட ஆவினங்களின் ஆத்மா சந்திக்கான ஒன்று கூடி பிரார்த்தனையும் கடந்த 3 ஆம் திகதி (3-04-2016) மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இடம் பெற்றுள்ளது.

-இதன் போது ஆலயத்திற்கு சொந்தமான சிசுக்களுடன் கூடிய பசுக்கள்,மற்றும் ஏனைய எருதுகளும் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினால் இறைச்சிக்காக விற்கப்பட்டு வதை செய்யப்பட்டமைக்கு  எதிர்ப்பும் வெளிப்படுத்தப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தளங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் ஆலயம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து இன்று அதன் புனிதத்தன்மை பேனிப்பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தினால் பாரிய அளவில் பாதிக்கப்பட்ட   திருக்கேதீஸ்வர ஆலயம் பின் அரச படைகளின் ஆக்கிரமிப்புகளினுள் சிக்கிக்கொண்ட நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அரச படைகளிடம் இருந்து மீண்டும்  மீட்கப்பட்டது மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தளங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் ஆலயம்.

-இந்த நிலையில் ஆலயத்தின் புனிதத்தன்மையையும், தமிழர்களின் அடையாளத்தையும் அழிக்கும் நோக்கிலும், சிசுக்களுடன் சுடிய  பசு மாடுகள் மற்றும் எருதுகளும்   விற்பனை செய்யப்பட்டு, திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச்சபையினர் பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாக ஆலய பக்தர்களும், திருப்பணிச் சபையின் சில முக்கிய உறுப்பினர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

-மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குச் சொந்தமான பசு மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என ஆலய திருப்பணிச்சபையின் ஆட்சிக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் ஆனால் அதனையும் மீறி சிலர் சட்டவிரோதமாக பசு மாடுகளை விற்பனை செய்துள்ளதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆனால் பசுமாடுகள் எவையும் விற்பனை செய்யப்படவில்லை என்று திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபை மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த மறுப்பை ஏற்க முடியாது என்றும் மாடுகள் விற்பனை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் திருப்பணிச் சபையின் சில உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
பசு மாடுகள் விற்பனை செய்யப்பட்டதற்கு ஆதாரமான பற்றுச்சீட்டுக்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் உள்ள அதிகளவான பசு மாடுகள் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாகவே அங்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் நீதிமன்றத்தின் அனுமதி கூட இல்லாத நிலையில் ஆலயத்திற்காக வழங்கப்பட்ட சிசுக்களுடன் கூடிய பசுக்கள்,மற்றும் ஏனைய எருதுகளும் எவ்வாறு இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது வரை 39 பசு மாடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அவற்றில் 13 ஆவினங்கள் காப்பாற்றப்பட்டு அங்கத்தவர் ஒருவரின் பாதுகாப்பில் பராமறிக்கப்பட்டுள்ளது. 9 ஆவினங்கள் இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளது.
ஏனைய 17 ஆவினங்களின் நிலைப்பாடு கேள்விக்குறியாக உள்ளது என திருக்கேதீஸ்வர ஆலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் நிருபர்-


தொடர்புபட்ட செய்தி ,,
திருக்கேதீஸ்வர ஆலயத்தை மாசுபடுத்தும் விசமத்தனமான பிரசுரங்கள்! நிர்வாகம் கண்டனம்!
http://www.newmannar.com/2016/04/Mannar_12.html















மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் உள்ள பசு மாடுகள் இறைச்சிக்காக விற்பனை- உண்மைகள் அம்பலம்....படங்கள் இணைப்பு Reviewed by Author on April 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.