ஒபாமாவை உற்சாகமாக வரவேற்ற பிரித்தானிய குட்டி இளவரசர்....
அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா மற்றும் அவருடைய மனைவி மீச்செல் ஆகியவர்களை பிரித்தானிய குட்டி இளவரசரான ஜோர்ஜ் உற்சாகமாக வரவேற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானிய நீடிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா மற்றும் அவருடைய மனைவி மீச்செல் ஆகியோர் 3 நாள் பயணமாக பிரித்தானியா சென்றுள்ளனர்.
நேற்று பிரித்தானிய பிரதமர் கமெரூனுடன் ஆலோசனை மேற்கொண்ட ஒபாமா, ‘பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தொடர்ந்து நீடிக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு, Kensington அரண்மனையில் ஒபாமா மற்றும் மீச்செலுக்கு இரவு உணவு தயார் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று மாலை அரண்மனைக்கு வந்த ஒபாமாவை ‘ஹலோ, மிஸ்டர் பிரிஸிடெண்ட்’ என உற்சாகமாக கூறி குட்டி இளவரசரான ஜோர்ஜ் ஒபாமாவை வரவேற்றுள்ளார்.
அப்போது, இரவு நேரம் என்பதால், குட்டி இளவரசர் இரவில் உறங்கும்போது அணியும் உடுப்புகளை அணிந்துள்ளார்.
குட்டி இளவரசரின் வரவேற்பால் உற்சாகமடைந்த ஒபாமா மற்றும் மீச்செல், குட்டி இளவரசருக்கு முன்னால் தரையில் அமர்ந்தவாறு கைகுழுக்கி பேசியுள்ளனர்.
அப்போது, இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.
தற்போது 2 வயது நிரம்பியுள்ள குட்டி இளவரசருக்கு ஒபாமா ஏற்கனவே ஒரு குதிரை பொம்மையை பரிசாக வழங்கியிருந்தார்.
வில்லியம்ஸ் மற்றும் ஒபாமா குட்டி இளவரசரை குறித்து நகைச்சுவையாக பேசிக்கொண்டு இருந்தபோது, ஜோர்ஜ் தன் தாயாருடன் அந்த குதிரை மீது அமர்ந்து விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.
பிரித்தானிய சாம்ராஜ்ய வரலாற்றில் முதன் முறையாக பிரித்தானிய அரண்மனையின் தனி அறையில் ஒரு அமெரிக்க அதிபரை குழந்தை பருவத்தில் வரவேற்றுள்ளது குட்டி இளவரசர் ஜோர்ஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவை உற்சாகமாக வரவேற்ற பிரித்தானிய குட்டி இளவரசர்....
Reviewed by Author
on
April 24, 2016
Rating:

No comments:
Post a Comment