வடக்கு மாகாணசபையின் யோசனையை கண்டித்துள்ள ஜாதிக ஹெல உறுமய
வடக்கு மாகாணசபை முன்வைத்துள்ள அரசியல் அமைப்பு யோசனைகளை ஜாதிக ஹெல உறுமயகண்டித்துள்ளது.
மொழிரீதியாக மாகாணங்களை பிரிக்கும் போது நாடு பிளவுப்படும் என்று அந்தக் கட்சியின்தேசிய அமைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், வடக்குமாகாணசபை சமர்ப்பித்துள்ள யோசனை குறித்து ஜனாதிபதி மற்றும்பிரதமர் ஆகியோர் தீவிரமான தமது கவனத்தை செலுத்தவேண்டும் என்று வர்ணசிங்ககோரியுள்ளார்.
வடக்கு மாகாணசபை, தமிழ் பேசும் மக்களுக்கான புறம்பமான பிராந்தியத்தை உருவாக்கமுனைகிறது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது இனங்களுக்கு இடையில் பாரிய பிளவை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாணசபையின் யோசனையை கண்டித்துள்ள ஜாதிக ஹெல உறுமய
Reviewed by NEWMANNAR
on
April 13, 2016
Rating:

No comments:
Post a Comment