அண்மைய செய்திகள்

recent
-

ஜெயலலிதா பிரசாரக் கூட்டங்கள் என்ன திறந்த வெளி சித்ரவதைக் கூடங்களா ?


தேர்தல் பிரசாரம் என்றால் அனல் பறக்கும் என்பது அரசியல் கட்சித் தலைவர்களின் பேச்சில்தான் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் கொளுத்தும் கோடை வெயிலில் காசு கொடுத்து கூட்டி வந்து, மனித உயிர்களைக் கருக வைத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிரசாரம் நடத்துவதாக சமூக வலைத்தளங்களில் கடும் கொந்தளிப்புடன் காரசார விவாதங்கள் அரங்கேறி வருகிறது.


அதிமுக ஆட்சி முடியும் தருவாயில் இது போன்று நடப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பிரசாரக் கூட்டங்கள் அதிலும்,முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றுப் பேசும் கூட்டம் என்றால் அதற்கு மக்களை,கட்சிக்காரர்களை அழைத்து வந்து மாஸ் காட்டும் அதிமுக பிரமுகர்கள், ஜெயலலிதா மேடையில் ஏறும் முன்பாக, அதுவும் அவரின் வருகைக்கு பல மணி நேரத்திற்கு முன்பாகவே மண்டை காயும் வெயிலில் அமர வைத்து, தங்களின் 'அம்மா பக்தி' யை காட்ட வேண்டுமா என்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த கொளுத்தும் வெயில் பிரசாரக் கலாச்சாரம் இந்தத் தேர்தலில் மட்டும் நடப்பது அல்ல. கடந்த நாடாளுமன்றத் தேர்தல், அதற்கு முந்தைய சட்டமன்றத் தேர்தல் என்று ஆண்டாண்டு காலமாக இப்படித்தான் நடக்கிறது. ஆனால் முன்பைவிட இந்தக் கோடை, கூடுதல் வெப்பத்தைக் கொட்டும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதே போல பருவமழையும் அதிக அளவு பெய்யும் என்றும் கூறி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தத் தகவல்கள் அதிமுக தலைமைக்குத் தெரியுமா என்பதும், ஜெயலலிதாவைச் சூழ்ந்துள்ள அதிகார மையம் இந்த தகவலை அவரது கவனத்திற்கு கொண்டு சென்றனவா என்பதும் மிகப் பெரிய கேள்விக்குறியே.

ஆனந்த விகடன் 

ஜெயலலிதா பிரசாரக் கூட்டங்கள் என்ன திறந்த வெளி சித்ரவதைக் கூடங்களா ? Reviewed by NEWMANNAR on April 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.