மன்னார் பொதுவிளையாட்டு மைதானம் சீரமைப்பு பணிகள் தீவிரமாக……..
2015ம் ஆண்டு பண்டிகைக்கால சந்தை கடைத்தொகுதி மன்னார் நகரசபைக்கு 05 மில்லியன்(50 இலட்சம் ரூபாய்) வருமானத்தினை பெற்றுக்கொண்டது நகர சபை அபிவிருத்தி செயற்பாட்டிற்கு ஒதுக்கிய 03மில்லியன்(300000) இலட்சம் ஒதுக்கி இருந்தது. மன்னார் நகர மக்களின் அமைப்புகளின் வேண்டுகோளுக்கினங்க மன்னார் பொது விளையாட்டரங்கை புனரமைப்பதற்கு ஒப்புதல் வழங்கியதையடுத்து.
மன்னார் பொது விளையாட்டு மைதானம் மறுசீரமைப்பு பணிகள் கடந்த மாதங்களாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது…
மன்னார் பொதுவிளையாட்டு மைதானம் சீரமைப்பு பணிகள் எப்போது நிறைவடையும் என்பதை அறிந்து கொள்ள மன்னார் நகரசபைச்செயலாளர்.( X-L-R-BRITTO)அவர்களிடம் நியூ மன்னார் இணையம் கேள்வியை முன்வைத்தபோது…….
மன்னார் பொது விளையாட்டு மைதானம் முற்று முழுதாக சீரமைப்பு பணிகள் நிறைவடைய குறைந்தது 30 நாட்களாவது ஆகும் காரணம் என்ன வென்றால் மண் பிரச்சினையாகவுள்ளது. இது வரை 380 லோட்டிற்கு இற்குமேற்பட்ட மண் அடித்து பரவி சமதரையாக்கும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. இன்னும் சில பகுதிகளுக்கு மண் அடிக்க வேண்டியுள்ளதோடு முற்றுமுழுதாக மண் அடித்து பரவி தண்ணீர் அடித்து புல்லுக்கொட்டை போட்டு முளைக்கவைக்வும் எண்ணியுள்ளேன் அத்தோடு…..
பொது மைதானத்தினை சுற்றியுள்ள மதிலினை வெள்ளை வர்ணம் பூசி மன்னாரில் உள்ள வர்த்தகர்களுக்கு கடை விளம்பரத்திற்கு கொடுத்து கிடைக்கும் தொகையினை வைத்துக்கொண்டு மன்னார் மண்ணில் சாதனைபுரிந்த மண்ணின் மைந்தர்களை கௌரவப்படுத்தும் விதமாக அவர்களின் சாதனைகளும் அவர்களின் உருவப்படத்தினையும் மைதானத்தின் உட்சுவரில் பொறிப்பதற்கும் எண்ணியுள்ளேன் இதற்கு மன்னார் சாதனை மைந்தர்களும் மக்களும் ஆதரவுதரவேண்டும்
அதுபோலவே பொதுமைதானத்தின் உள்ளுக்குள் அமைந்திருக்கும் பெவிலியன் மேற்கூரையும் மாற்றம் செய்ய வேண்டும்.
பொது மைதானத்தின் பிரதான நுழைவாயில் கதவுகள் புதிதாக போடவேண்டும்.
பொது மைதானத்தின் சற்றி மின்விளக்குகள் பொருத்தவேண்டும்.
இத்தனை செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு தான் 30 நாட்கள் தேவையாக உள்ளது.
மன்னாரில் உள்ள விளையாட்டு அமைப்புகள் பொது மைதானத்தின் துப்பரவு பணிகளிலாவது எமக்கு உதவி செய்யலாமே அவ்வாறு செய்யுமிடத்து மிகவும் விரைவாக சீரமைப்பு பணிகள் முடிவடையும் அல்லவா…
இதுவரை சீரமைப்பு பணிக்காக 250000 இலட்சம் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது. முழுமையான சீரமைப்பு பணியின் பின் செலவு பற்றி அறியத்தருகின்றேன்.
அபவிருத்திப்பணியில் இணைந்திருங்கள் மன்னார் எமது மாவட்டம்……
மன்னார் பொதுவிளையாட்டு மைதானம் சீரமைப்பு பணிகள் தீவிரமாக……..
Reviewed by Author
on
April 02, 2016
Rating:
Reviewed by Author
on
April 02, 2016
Rating:



No comments:
Post a Comment