அண்மைய செய்திகள்

recent
-

’பிரித்தானிய மகாராணி இனியும் எங்களை ஆளக்கூடாது’: ஜமைக்கா அரசு அதிரடி அறிவிப்பு.....


பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத்தை தலைவி பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய உள்ளதாக ஜமைக்கா நாடு அதிரடியாக அறிவித்துள்ளது.

உலகில் உள்ள 75 சதவிகித நாடுகள் அனைத்தும் பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்து தான் சுதந்திரம் பெற்றுள்ளது.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் பிரித்தானியா நாட்டிலிருந்து சுதந்திரம் பெற்று சுய அதிகாரத்துடன் இயங்கி வருகின்றன.

ஆனால், ஜமைக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா உள்ளிட்ட 15 நாடுகள் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்று இருந்தாலும் கூட, அந்த நாடுகளுக்கு இன்றளவும் அதிகாரப்பூர்வ ராணியாக இரண்டாம் எலிசபெத் தொடர்ந்து பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், பிரித்தானிய மகாராணி இனியும் எங்களுக்கு தலைவியாக இருப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றும், எங்களுடைய நாட்டிற்கு தலைவராக ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளதாக ஜமைக்கா கவர்னர் ஜெனரலான பேட்டிரிக் ஆலன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும், மகாராணியை தலைவி பொறுப்பிலிருந்து நீக்கும் அறிவிப்பை மகாராணியின் 90-வது பிறந்த நாளான ஏப்ரல் 21ம் திகதிக்கு ஒரு நாள் முன்னதாக அறிவிப்போம் என தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளுக்கு மத்தியில் உள்ள இந்த ஜமைக்கா நாட்டிற்கு பிரித்தானிய மகாராணி கடந்த 2002ம் ஆண்டு தான் கடைசியாக பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.



’பிரித்தானிய மகாராணி இனியும் எங்களை ஆளக்கூடாது’: ஜமைக்கா அரசு அதிரடி அறிவிப்பு..... Reviewed by Author on April 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.