மன்னார் கட்டையடம்பன் பகுதியில் பாரிய விபத்து ---சாரதியும் உதவியாளரும் உயிர் பிழைத்துள்ளனர்.
மன்னார் கட்டையடம்பன் பகுதியில் பாரிய விபத்து
இன்று மாலை வேளையில் 5-30 மணியளவில் மன்னார்-மடு பிரதான வீதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. மன்னார் பேசலையில் மீன்கொள்வனவு செய்துகொண்டு திரும்புகையில் மன்னார் மடு பிரதான வீதியில் கட்டையடம்பன் பாடசாலைக்கு முன்பாகவுள்ள பாரிய வளைவினால் திருப்பும் போது வழுக்கி கட்டுப்பாட்டை மீறி வாய்க்காலுக்குள் வாகனம் புகுந்தது. வாகனம் பலத்த சேதங்களுக்கு உள்ளானதுடன் தெய்வாதீனமாக வாகன சாரதியும் உதவியாளரும் உயிர் பிழைத்துள்ளனர்.
குறித்த விபத்து பற்றி மேலும் தெரிய வருவது மழை பெய்து கொண்டு இருந்ததாலும் பாரிய வளைவு என்பதாலும் வேகக்கட்டுப்பாட்டை மீறியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
மன்னார் கட்டையடம்பன் பகுதியில் பாரிய விபத்து ---சாரதியும் உதவியாளரும் உயிர் பிழைத்துள்ளனர்.
Reviewed by Author
on
April 08, 2016
Rating:

No comments:
Post a Comment