அண்மைய செய்திகள்

recent
-

மன்-புனித பற்றிமா மத்திய மகாவித்தியாலயத்தின் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வானது----முழுமையான படங்கள் இணைப்பு



மன்னார் மன்-புனித பற்றிமா மத்திய மகாவித்தியாலயத்தின் மாணவர்கள் கௌரவிப்ப நிகழ்வானது 07-04-2016 வியாழன் காலை மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. பாடசாலை வரலாற்றில் ஒரு பொன்னான நாளாகும் இந்த நாள் கல்வி விளையாட்டு கலை இம்மூன்றுடன் மாணவமாணவிகளின் ஒழுக்கம் தலைமைத்துவப்பண்பு சமூதாயத்தின் நல்பிரஜையாக மிளிர மாணவமாணவிகளை பயிற்றுவிப்பதும் பயிற்றப்படுவதும் பாடசாலை தான்.

கடந்த 2015 ஆண்டு சாதனை புரிந்த மாணவ மாணவிகளை கௌரவப்படுத்தும் விதமாக 07-04-2016 அன்று காலை குறிப்பாக மாவட்டம் மாகாணம் தேசியம் சாதனை படைத்த மாணவமாணவிகளான….
  • க.பொ.த.சாதாரணப்பரீட்சையில் 9Aபெற்ற மாணவன் வசந்தகுமார்
  • க.பொ.த.உயர் தரப்பரீட்சையில் மாவட்டத்தில் கலைப்பிரிவில்- 03நிலை பெற்றுக்கொண்ட மாணவன் J.ஏஞ்சலன்
  • க.பொ.த.உயர் தரப்பரீட்சையில் மாவட்டத்தில் பொறியியல் பிரிவில் 03 நிலை பெற்றுக்கொண்ட மாணவி சுபாசினி
  • தேசிய மட்ட பேச்சுப்போட்டியில் 01 நிலை  வினிதா
  • வட மாகாண புதிய சாதனை 4*100 அஞ்சலோட்டம் 48.8செக்கன் அத்தோடு
2015 ஆண்டு மன்னார் 1AB பாடசாலைகளில் இருந்து க.பொ.த.சாதாரணப்பரீட்சை பரீட்சை எழுதிய பாடசாலைகளில் கணிதம் சித்தியெய்திய 79% மாணவர்களை கொண்ட சிறந்த பாடசாலையாகவும் உள்ளது.
இவ்வாறான கௌரவிப்பு நிகழ்வுகள் செய்வதன் மூலம் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிப்பதோடு ஏனைய மாணவமாணவிகளுக்கும் உற்சாகத்தினையும் ஊட்டசக்தியினையும் வழங்குவதோடு பாடசாலை வெற்றி பெறுவதற்கு எல்லா வழிகளிலும் உழைக்கின்ற ஆசிரியர்களின் பங்களிப்பு அதிபர் அவர்களின் அயராத முயற்சி அத்தோடு பெற்றோர்களினதும் பழையமாணவமாணவிகளினதும் பாடசாலைச்சமூகத்தினதும் ஒத்துழைப்பேயாகும்.
வெற்றிகரமாக பாடசாலை முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர் பெற்றோர்கள் ஒன்றிணைந்து செயற்படுதல் சாதனைதான்......

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட் குருமுதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அவர்களும் பேசாலைக்கிராமத்தின் துனைப்பங்குத்தந்தை அருட்தந்தை பேலன் அவர்களும்  பேசாலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பிரதம குரு மஹா ஸ்ரீ தர்மகுமாரகுருக்கள் அவர்களுடன் பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் J.ஸ்ரணிஸ்லஸ் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்…

“சோதனைகள் கடந்தால் சாதனை” 



































மன்-புனித பற்றிமா மத்திய மகாவித்தியாலயத்தின் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வானது----முழுமையான படங்கள் இணைப்பு Reviewed by Author on April 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.