வெள்ளை மாளிகையில் கறுப்பு தங்கம் பராக் ஒபாமா இப்படிபட்டவரா? உங்களுக்கு தெரியுமா....

அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியான பராக் ஒபாமாவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அனுபவத்துக்குரிய பல அரிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
அவருடைய அரசியல் மற்றும் ஆட்சியை கடந்த சில உண்மைகள் நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
விருதுகள் பெற்ற பெருமை
சிறந்த வார்த்தைகள் பேசும் ஆல்பத்திற்குரிய கிராமி விருதுகளை இரண்டுமுறை பெற்ற உணர்வுப்பூர்வமான சிந்தனையாளர்.
முதல்முறையாக, பிப்ரவரி 2006 ல் " Dreams from my Father " என்ற சுருக்கப்பட்ட ஒலி புத்தகத்திற்காகவும், இரண்டாவது முறையாக பிப்ரவரி 2008 ல் "Audacity of Hope" என்ற ஒலி புத்தகத்திற்காகவும் அந்த விருதை பெற்றார்.
ஹாரிபாட்டர் கதை தொடரில் உள்ள ஒவ்வொரு தனி புத்தகங்களையும் தன் மகள் மாலியாவுடன் கலந்து படித்திருக்கிறார்.

தனி நம்பிக்கை
சிறிய மடோனா குழந்தை வைத்திருக்கும் சிலையையும், ஈரக் சிப்பாய்கள் அணிந்திருக்கும் வகையான ஒரு தாயத்தையும் எப்போதும் அதிர்ஷ்டம் கருதி தன்னுடன் வைத்திருக்கிறார்.
குடும்ப பின்புலம்
ஒபாமாவின் தாய் வெள்ளை இனத்தவர், தந்தை கென்யாவை சேர்ந்த கருப்பர் இனத்தவர்.
ஒபாமாவின் பெற்றோர்கள் முதன்முதலாக 1960 ல் ரஷ்யாவில் மனோவாவில் உள்ள ஹவாய் பலகலைக்கழகத்தில் ஒரு வகுப்பறையில் சந்தித்தார்கள். அப்போது ஒபாமாவின் தந்தை அரசு உதவித்தொகையில் அங்கு படித்து வந்த ஒரு வெளிநாட்டு மாணவர்.
அவரது தந்தை பராக் ஹுசைன் ஒபாமா கென்யா அரசு அலுவலர். அவருக்கு ஆடு மேய்ச்சல் தொழிலும் இருந்தது. அவருடைய தாய் ஸ்டேன்லி ஆன் ஒபாமா மானுடவியலாளர் ஆவார்.

பெற்றோர் பிரிந்தனர்
ஒபாமாவின் தாத்தா, தனது மகன் ’ஆன்’ஐ திருமணம் செய்து கொள்வதை எதிர்த்தார். அதற்கு காரணம், அவர் கென்யாவில் தனது முதல் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கைவிட நேரும் என்பதுதான். மேலும் ஆன் கௌகேசிய இனத்தைச் சேர்ந்தவர்.
ஒபாமா ஹவாயில் உள்ள ஹான்லூலூவில் 1961 ம் ஆண்டு ஆகஸ்ட் 4 ம் தேதி பிறந்தார்.
இவருடைய முழுப்பெயர் பராக் ஒபாமா ஹுஸைன் ஜூனியர். இவருக்கு கென்யாவில் பெயர் சூட்டும்போது பீர் கொடுக்கப்பட்டது.
பராக் என்ற வார்த்தைக்கு பொருள், கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்.
பெற்றோருக்குள் விவாகரத்து
ஒபாமா 2 வயது குழந்தையாக இருக்கும்போதே அவருடைய பெற்றோர்கள் விவாகரத்து செய்துகொண்டனர்.
காயம் நிறைந்த வாழ்க்கை
பெற்றோரின் விவாகரத்துக்குப் பிறகு, ஹவாயில் உள்ள தாய்வழி தாத்தா பாட்டியுடன் வாழ்வதற்கு முன்பாக, இந்தோனேசியாவில் 4 வருடம் தாய் மற்றும் மாற்று தந்தையுடன் புரிதல் இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்ந்தார்.
இந்தோனேசியாவில் வாழ்ந்தபோது, வெட்டுக்கிளி மற்றும் பாம்பு இறைச்சியும் சாப்பிட நேர்ந்தது.
அவருடைய பாட்டி அவருக்கு கரடி, பார் போன்ற அழகான புனைப்பெயர்களை வைத்து அழைத்தார். பாரி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வளர்ந்த அவர், பல்கலைக்கழக படிப்பிற்கு பிறகு முழுப்பெயரோடு அழைக்கப்பட்டார்.
ஒபாமா ஹார்ட்வர்டில் படித்தபோது அனைத்து பெண்கள் குழுக்களாலும் ஒதுக்கப்பட்டார். அதற்காக அவர்கள் இப்போது வருந்தலாம்.
மிச்சிலியுடனான அவரது முதல்நாள் சந்திப்பு “Do The right thing' என்ற சினிமா பார்க்கும் போதுதான்.
ஒபாமாவின் முதல் கார் துருப்பிடித்திருக்கும் பின்புற பயணிகள் இருக்கையின் கதவில் பெரிய துருப்பிடித்த ஓட்டையே இருக்கும் என்று ஒபாமாவை கலாய்க்கிறார் மனைவி மிச்சிலி.
ஒபாமாவின் தந்தை 1982 ல் கென்யாவில் ஒரு கார் விபத்தில் இறந்தார். அவருடைய தாயார் 1995 ல் கருப்பை புற்றுநோயால் இறந்தார்.
தேர்தல் பிரசாரத்தின் போது அவர் CNN சேனலை பார்க்க மறுத்தார். அதற்கு பதிலாக விளையாட்டு சேனலை பார்த்து ரசித்தார்.
மகளை வைத்து மக்களுக்கு கடிதம்

அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்பாக, பராக் ஒபாமா தன் மகளுக்காக பரேடே மேகஸினில் ஒரு கடிதம் எழுதினார். அது மகளுக்காக மட்டுமல்ல ஒவ்வொரு அமெரிக்க குழந்தைகளுக்கும் பொருந்துவதாக இப்போதும் போற்றப்படுகிறது.
நேசித்த தலைவர்கள்
ஒபாமா உலக அரசியலில் தான் வியந்து நேசிக்கும் மூன்று தலைவர்களாக, மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங், ஆபிரகாம் லிங்கன் ஆகியோரை புகழ்ந்து கூறுகிறார்.
சிறந்த மனிதராக தேர்வு
’டைம்’ பத்திரிகையின் ஆண்டின் சிறந்த மனிதராக 2008 ல் தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு, 2009-ல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சில விமர்சனங்கள் எழுந்தாலும் அதனைத் தொடர்ந்து விரைவிலேயே அமெரிக்க ஜனாதிபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிறிஸ்தவரே ஒபாமா
பராக் ஒபாமா ஒரு கிறிஸ்துவரே, சிகாகோவில் உள்ள கிறிஸ்துவின் டிரைனிடி ஐக்கிய திருச்சபையின் முன்னால் உறுப்பினரும் ஆவார்.
ஒரே பாலின திருமணத்தை அனுமதித்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா. அவர் அப்போது அமெரிக்கா சட்ட சிக்கல்களை கடந்த ஒரு நாடாக இருக்க வேண்டும் என்றார்.
ஒபாமா ஒரு புத்தகம்

இன்று உலகுக்கான மிகப்பெரிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் இருக்கும் அவர் இளமையில் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளில் சரியான வழிகாட்ட தந்தை இல்லையே என ஏங்கியிருக்கிறார்.
உலகில் எந்த குழந்தைக்கும் நேரக்கூடாத கொடுமையான பெற்றோர் விவாகரத்து, அமெரிக்க ஜனாதிபதிக்கே குழந்தைப் பருவத்தில் நடந்துள்ளது.
இதுபோன்ற குடும்பச்சுழலில் சிக்கி தீய திசையில் சென்று ஒரு நல்ல குடிமகனாக முடியாமல் போகிறவர்களும் உண்டு.
ஆனால், உலகின் முதல் மகனாக கருதப்படும் பதவியிலே அமர்ந்த அவர் பெயரால் மட்டுமல்ல பிறப்பாலும் ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர் தான்.
தொகுப்பு-வை-கஜேந்திரன்
வெள்ளை மாளிகையில் கறுப்பு தங்கம் பராக் ஒபாமா இப்படிபட்டவரா? உங்களுக்கு தெரியுமா....
Reviewed by Author
on
April 11, 2016
Rating:

No comments:
Post a Comment