மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு இவ்வருடத்திற்குள் தீர்வு-பா.சத்தியலிங்கம்.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு சுகாதார பிரச்சினைகள் இவ்வருடத்திற்குள் தீர்த்து வைக்கப்படும் என வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் சுமார் 180 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தை முன் மாதிரியாகக் கொண்டு எயிட்ஸ் மற்றும் மலேரியா நோய்களை அழித்தொழிப்பதற்கான கருத்திட்ட உலக நிதியத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 6 கட்டிடங்கள் நேற்று திங்கட்கிழமை(11) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
முசலி, சிலாபத்துறை, நானாட்டான், சிறுநாவற்குளம், எருக்கலம்பிட்டி, பேசாலை ஆகிய 6 பிரதேசங்களிலும் ஆறு வகையான திட்டங்களுக்கான புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் மூலம் மன்னார் மாவட்டத்தில் சுகாதார சேவையில் புதிய மாற்றம் ஏற்படும் என்பதனை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
மன்னார் பிரதேசத்தினுடைய சுகாதார சேவையில் நிறைய விடையங்கள் மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கின்றது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு சுகாதார பிரச்சினைகள் இவ்வருடத்திற்குள் தீர்த்து வைக்கப்படும்.
நோய் வறும் முன் காப்போம் என்ற செயற்திட்டமும்,நோய் வந்த பின் காப்போம் என்ற திட்டமும் நாங்கள் செயற்படுத்தியுள்ளோம்.
இத்திட்டங்கள் போன்று மன்னார் பொது வைத்தியசாலையில் எதிர்காலத்தில் முக்கியமான வேளைத்திட்டங்களை முன்னெடுக்க எமது அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதனடிப்படையில் மன்னார் மாவட்டத்தின் சுகாதார மேம்பாட்டில் வடமாகாண சபை கரிசனையோடு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு இவ்வருடத்திற்குள் தீர்வு-பா.சத்தியலிங்கம்.
Reviewed by NEWMANNAR
on
April 12, 2016
Rating:
No comments:
Post a Comment