அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்குடன் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடங்கள் திறந்து வைப்பு....படங்கள் இணைப்பு


மன்னார் மாவட்டத்தில் சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தை முன் மாதிரியாகக் கொண்டு எயிட்ஸ் மற்றும் மலேரியா நோய்களை அழித்தொழிப்பதற்கான கருத்திட்ட உலக நிதியத்தின் கீழ்  மன்னார் மாவட்டத்தில்  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் இன்று (11) திங்கட்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட மக்களின் வைத்தியத் தேவையினை பூர்த்தி செய்யும் நோக்குடன் சிலாபத்துறை பிரதேச வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு, முசலி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, நானாட்டான் பிரதேச வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவு, சிறுநாவற்குளம் பிராந்திய மலேரியா தடை இயக்கம், எருக்கலம் பிட்டி பிரதேசவைத்தியசாலையின்  வெளி நோயாளர் பிரிவு, பேசாலை பிரதேச வைத்தியசாலையின்  வெளி நோயாளர் பிரிவு ஆகியவற்றுக்கான புதிய கட்டிடங்கள் இன்று  திங்கட்கிழமை(11) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொறு கட்டிடங்களும் சுமார் 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ்   மொத்தமாக 180 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ்  அமைக்கப்பட்ட குறித்த 6 நிலையங்களும்  இன்று திங்கட்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படடது.
வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் வழி காட்டலின் கீழ் வடமாகாண சுகாதார மைச்சர் வைத்திய கலாநிதி பா.சத்தியலிங்கம் தலைமையில் குறித்த கட்டிடங்கள் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான  சட்டத்தரணி எஸ்.பிறிமுஸ் சிறாய்வா, வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிப்பாளர், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய அதிகாரிகள், வைத்திய அத்தியட்சகர், உட்பட பலர் குறித்த திறப்பு விழா நிகழ்வில்  கலந்து கொண்டிருந்தனர்.

மீள்குடியேறிய மக்களின் அத்தியவாசிய தேவைகளில் ஒன்றான  வைத்தியத் தேவையினை பூர்த்தி செய்வதை நோக்கமாக  கொண்டும், மேலதிக சுகாதார வைத்திய தேவையினை மேற்கொள்ளும் நடவடிக்கையினை மன்னார் மாவட்டத்தில் வடமாகாண சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)











.
மன்னார் மாவட்டத்தில் சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்குடன் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடங்கள் திறந்து வைப்பு....படங்கள் இணைப்பு Reviewed by Author on April 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.